Jimny Boot Space இவ்வளவு பெருசா? 2 பெரிய பெட்டி வச்சும் இன்னொரு சின்ன பெட்டி வைக்க இடம் இருக்குதே!
மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தனது லைஃப்ஸ்டைல் எஸ்யூவி காராக ஜிம்னி காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தயாரித்து வெளிநாட்டில் விற்பனை செய்து வரும் ஜிம்னி 3 டோர் காரின் 5 டோர் வெர்ஷனாகும்.
இந்த கார் தான் ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் பலரது கவனத்தைப் பெற்ற காராக இருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் ஜனவரி மாதமே துவங்கிவிட்டது. இந்த கார் குறித்த விபரங்கள் எல்லாம் வெளியாகியிருந்தது. அதில் மாருதிஜிம்னி காரில் 208 லிட்டர் பூட் வசதி இருப்பதாகவும், 2வது வரிசை சீட்டை மடக்கினால் 332 லிட்டர் பூட் வசதி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த பூட் வசதி எவ்வளவு இட வசதி கொண்டது எனக் காட்டும் வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் 2 பெரிய ட்ராலி பேக் வைக்கப்பட்டுள்ளது. இது போக ஒரு சிறிய பேக் வைக்கவும் இதில் இடம் இருக்கிறது. இது பார்க்க நம்மை ஆச்சரியப்படுத்தியது. இவ்வளவு பூட் ஸ்பேஸ் கொண்ட காரை பலர் பார்த்ததில்லை.
இந்த கார் மஹிந்திரா தார் காருக்கு போட்டியாக இருப்பதால் மஹிந்திரா தார் காரில் கூட இதை விட குறைவான இடவசதி தான் இருக்கும் எனத் தெரிகிறது. இருந்தாலும் மஹிந்திரா தார் 5 டோர் வெர்ஷன் கார் வெளியாகும் போது தான் அதன் பூட் குறித்த விரிவான விபரங்கள் வெளியாகும். தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

மாருதி ஜிம்னி காரை பொருத்தவரை ஸெட்டா மற்றும் ஆல்பா ஆகிய 2 வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் டாப் எண்ட் ஆல்பா வேரியன்டில் அர்க்மெஸ் சவுண்ட் சிஸ்டம், 9 இன்ச் ஸ்மார்ட் ப்ளே ப்ளோ + இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், க்ரூஸ் கண்ட்ரோல், ஃபாக்லேம்ப், எல்இடி ஹெட்லைட், ஹெட்லைட் வாஷர், ஆட்டோ ஹெட்லேம்ப், அலாய் வீல் மற்றும் பாடி கலர்டு டோர் ஹேண்டில் ஆகிய விஷயங்கள் இருக்கின்றனர்.
பேஸ் வேரியன்டில் 7.0 டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர்டு விண்டோஸ், கலர் எம்ஐடி டிஸ்பிளே, ரிவர்ஸிங் கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி, சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர், பிரேக் லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஸியல், எலெக்ட்ரிக்ரானிக் ஸ்டெபிளிலிட்டி புரோகிராம், 6 ஏர்பேக், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபுள் விங் மிரர் மற்றும் ஸ்டியரிங் வீல்.

இந்த இரண்டு வேரியன்டிலும் ஒரே இன்ஜின் தான். கே15பி, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 105 பிஎச்பிபவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.
இந்த லைஃப்ஸ்டைல் எஸ்யூவி சுஸூகியின் ஆல் கிரிப் ப்ரோ 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்கும் திறன் கொண்டது. இந்த கார் 2 டூயல் டோன் உட்பட 7 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆஃப்ரோடு லைஃப் ஸ்டலை் எஸ்யூவி என்றாலோ ஒரு த்ரில் எக்ஸ்பிரியஸன் கொண்ட அதே நேரம் நீண்ட தூரம் பயணிக்கும் ஆர்வம் உள்ள மக்களுக்கானது தான். அவர்களுக்கு அதிக பூட் ஸ்பேஸ் வழங்குவது சிறப்பாக விஷயம் தான். இந்த கார் விற்பனைக்கு வரும் போது இன்னும் இந்த கார் குறித்த பல சிறப்பம்சங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









