இதை யாருமே எதிர்பார்க்கல! எம்ஜி கோமெட் இவி கார்ல அதுக்குள்ள இப்படி ஒரு அப்டேட்டா?
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்ம் உடன் இணைந்து தனது எம்ஜி கோமெட் இவி காரில் கனெக்டர் கார் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்திய மொழிகளில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சிஸ்டத்தை அதில் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எம்ஜி நிறுவனம் கடந்த மாதம் தனது கோமெட் இவி என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகும் போதே இந்த கார் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் இந்த காரின் அறிமுகத்திற்கு பிறகு எம்ஜி நிறுவனத்தை ஜியோ நிறுவனத்தின் ஓனர் முகேஷ் அம்பானி வாங்க போவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தற்போது எம் ஜி நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து தனது எம் ஜி கோமெட் இவி காரில் வாய்ஸ் அசிஸ்டென்ட்ஸ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. "ஹலோ ஜியோ வாய்ஸ் அசிஸ்டன்ட் என்ற பெயரில் அறிமுகமான இந்த தொழில்நுட்பத்தில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது
இந்த வாய்ஸ் அசிஸ்டென்ட் தொழில்நுட்பம் இந்திய மொழிகளை புரிந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மொழிகளில் வாய்ஸ் கமெண்ட் கொடுத்தாலும் அந்த கமெண்டை புரிந்து கொண்டு காரை கண்ட்ரோல் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் கமெண்ட் கொடுக்கலாம்.

இது மட்டுமல்லாமல் இதில் கிரிக்கெட் குறித்த தகவல்கள், வானிலை குறித்த தகவல்கள், ஜோதிடம் குறித்த தகவல்கள், தினசரி செய்திகள் குறித்த தகவல்கள், உள்ளிட்ட பல விஷயங்களை வாய்ஸ் கமெண்ட் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இது போக காரின் ஏசியை ஆன் செய்வது ஆப் செய்வது, காருக்குள் பாடலை ஒலிக்க வைப்பது உள்ளிட்ட கமெண்ட்களையும் கொடுக்க முடியும்.
இந்தத் தொழில்நுட்பம் இன்டர்நெட் உடன் கனெக்ட்டில் இருக்க இதில் ஜியோ நிறுவனத்தின் ஈசிம் கார்டு பொருத்தப்படுகிறது. வாகனம் தயாரிக்கப்படும் போது இந்த சிம் கார்டு பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் இந்த கார் பயணத்தின் போதே இன்டர்நெட் கனெக்டிவிட்டியுடன் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்து தொழில்நுட்பம் குறித்து எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குனர் கௌரவ் குப்தா கூறும் போது : "எம் ஜி இந்தியா மற்றும் ஜியோ இடையேயான இந்த பார்ட்னர்ஷிப் எம்ஜி கோமெட் இவி காரின் டிரைவிங் அனுபவத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. அதே நேரத்தில் பாதுகாப்பையும், காருக்குள் இருக்கும் அனுபவத்தையும் இந்த தொழில்நுட்பத்தால் மேம்படுத்த முடியும்"எனக் கூறினார்.
இது குறித்து ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆசிஸ் லோதா கூறும் போது: "ஹலோ ஜியோ வாய்ஸ் அசிஸ்டெண்ட், ஸ்டிரீமிங், பேமெண்ட் ஆப்ஸ், ஈ சிம், ஜியோ ஐஒடி ஆகியவை ரியல் டைம் கனெக்டிவிட்டியுடன் செயல்படும் திறன் கொண்டது. இது இன்ஃபோடெயின்மென்டுடன் இணைக்கப்படுகிறது. இந்த கனெக்டெட் தொழில்நுட்பம் இவி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை மிகப் பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. தற்போது கானெக்டெட் கார் தொழில்நுட்பம் முக்கியமான அம்சமாக இருக்கிறது. இது தற்போது பல கார்களில் வழங்கப்படும் அம்சமாக உள்ளது. இதை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது."எனக் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் வாங்கப் போவதாக வெளியா தகவலை அடுத்து எம் ஜி மற்றும் ஜியோ இடையேயான இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன்படி பார்த்தால் விரைவில் எம் ஜி மோட்டார் நிறுவனத்தை அம்பானி வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









