நகைக்கடை அதிபர்ன்னா சும்மாவா? அசால்டா ரூ2 கோடிக்குக் காரை வாங்கி சென்று கெத்து காட்டிய ஜான் அலுக்காஸ்

ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை நம் எல்லோருக்கும் தெரியும். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பல இடங்களில் கிளைகளை வைத்திருக்கும் ஒரு நகைக்கடை. இந்நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் ஜான் அலுக்காஸ். இவர் ஒரு கார் பிரியர். பல விலையுயர்ந்த கார்களை எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் தனது கார் கலெக்ஷனில் டொயோட்டா நிறுவனத்தின் லேண்ட் க்ரூஸர் எல்சி300 என்ற காரை வாங்கினார். இந்த காரை அவர் டெலிவரி எடுக்கும் வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். வெள்ளை நிறத்திலான இந்த காரை அவர் வாங்கியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நகைக்கடை அதிபர்ன்னா சும்மாவா? அசால்டா ரூ2 கோடிக்குக் காரை வாங்கி சென்று கெத்து காட்டிய ஜான் அலுக்காஸ்

இந்த வீடியோவில் ஜான் அலுக்காஸ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தனது லம்போர்கினி ஹராக்கேன் காரில் வந்திறங்கினார். அப்பொழுது அவருக்கு டெலிவரி வழங்கப்படவிருந்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி300 கார் ஒரு சிவப்பு துணியால் மூடப்பட்டிருந்தது.

ஜான் அலுக்காஸ் வந்திறங்கியதும் அந்த காரை அவர் அந்த காரை வாங்கியதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார். பின்னர் அவரிடம் அந்த காரின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அவர் நேராக காருக்கு சென்று அந்த சிவப்பு துணியை விலக்கினார். பின்னர் அவர் காரில் ஏறி அமர்ந்த காரை ஓட்டிச்செல்கிறார்.

தற்போது டொயோட்டா நிறுவனம் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியது. அப்பொழுது காரை காட்சிப்படுத்தியது மட்டுமல்லாமல் காரின் விலையையும் அறிவித்தது. இந்த கார் ஒரே வேரியன்டில் தான் விற்பனையாகிறது. இதன் விலை ரூ2.10 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் எல்இடி ஹெட்லைட், 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் அப்ஹோல்சரி, 14 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான தொழிற்நுட்ப அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. இந்த கார் டிஎன்ஜிஏவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய ஜிஏ-எஃப் பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நகைக்கடை அதிபர்ன்னா சும்மாவா? அசால்டா ரூ2 கோடிக்குக் காரை வாங்கி சென்று கெத்து காட்டிய ஜான் அலுக்காஸ்

முந்தைய தலைமுறையைப் போல இந்த காரில் 4x4 ஆப்ஷன் ஸ்டாண்டர்டாகவே இருக்கிறது. இந்த காரின் எடை அதிகரிக்கப்பட்டுள்ளது. காரின் சஸ்பென்சன் டெக்னாலஜியும் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரில் கைனடிக் டைனமிக் சஸ்பென்சன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கார் பல ஆஃப்ரோடு அம்சங்களைக் கொண்டுள்ளது. முந்தைய தலைமுறையிலிருந்து இந்த தலைமுறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கார் டீசல் இன்ஜின் என்ற ஒரே இன்ஜின் ஆப்ஷனிதான் இந்தியாவில் விற்பனையாகிறது. பெட்ரோல் இன்ஜின் சர்வதேச அரங்கில் மட்டும் தான் விற்பனையாகிறது.

நகைக்கடை அதிபர்ன்னா சும்மாவா? அசால்டா ரூ2 கோடிக்குக் காரை வாங்கி சென்று கெத்து காட்டிய ஜான் அலுக்காஸ்

டீசல் இன்ஜினை பொருத்தவரை 3.3 லிட்டர் வி6 டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 309 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜின் 10 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அரங்கில் விற்பனையாகும் பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 3.5 லிட்டர் ட்வின் -டர்போ சார்ஜ்வு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 415 பிஎஸ் பவரையும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இந்த இன்ஜின் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் பொருத்தப்படுவதில்லை.

இளம் தொழிலதிபரான ஜான் அலுக்காஸ், நாம் முன்னரே சொன்னது படி கார்களின் மீது அதிகமான விருப்பம் கொண்டவர் இவரிடம் அதிகமான சொகுசு மற்றும் எக்ஸாட்டிக் கார்கள் இருக்கிறது. குறிப்பாகச் சிவப்பு நிற ஷேடில் லம்போர்கினி ஹராக்கேன் கார் இருக்கிறது. இதை வீடியோவிலேயே நாம் எல்லாம் பார்த்தோம்.

இது போக போர்ஷே 911 கார் இருக்கிறது. தினந்தோறும் இந்த காரை தான் அவர் பயன்படுத்துகிறார். சிட்டி டிராஃபிக்கிற்கு ஏற்ற கார் இது தான். இது போக இவரிடம் மஹிந்திரா தார் கார் இருக்கிறது. ஆஃப்ரோடிங்கின் போது இந்த காரை தான் அவர் பயன்படுத்துவார்.

ஜான் முதன் முதலாக ஒரு பிரிமியர் பத்மினி காரில் தான் அவர் கார் ஓட்டிப்படித்தார். அவர் முதலில் வாங்கிய கார் மாருதி எஸ்டீம், இவர் இந்த காரை எடுத்துக்கொண்டு பல ரேலிகளுக்கு சென்றுள்ளார். இப்படிச் செல்லும் போது ஒரு ரேலியில் இந்த கார் முற்றிலும் சேதமடையும் அளவிற்கு விபத்தில் சிக்கியது.

இது போக இவரிடம் டொயோட்டா சிரா, துபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹோண்டா சிஆர்-எக்ஸ், டொயோட்டா ப்ரடோ ஆகிய கார்களை வைத்திருக்கிறார். இதில் டொயோட்டா ப்ரடோ காரை 12 ஆண்டுகளாக வைத்திருக்கிறார். அதில் 3.5 லட்சம் கி.மீ வரை பயணித்துள்ளார்.

லம்போர்கினி ஹராக்கேன் காருக்கு முன்னர் இவர் லம்போர்கினி கலாரேடோ காரை வைத்திருந்தார். இவரது கார் கலெக்ஷன்கள் பலரை வியக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது. தற்போது இந்த கலெக்ஷனில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரும் இணைந்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 16:00 [IST]
English summary
Jos alukkas ceo brought toyota land cruiser lc300 home know the details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+