நடிகர் கமல், ஷர்மிளாவிற்கு இந்த காரையா பரிசளித்தாரு? யாருமே இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கலயே!
கோவை கார் பெண் டிரைவர் சர்மிளாவிற்கு நடிகர் கமலஹாசன் பரிசளித்த கார் குறித்த ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் கமலஹாசன் மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ காரை வாங்கி பரிசளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
கோவை மாவட்டத்தில் தனியார் பஸ்ஸில் பெண் டிரைவராக பணியாற்றியவர் ஷர்மிளா. டிரைவிங் என்பது ஆண்களுக்கான துறை என பரவலாக மக்கள் மத்தியில் இருந்த எண்ணத்தை உடைத்து ஷர்மிளா ஒரு பெண்ணும் கனரக வாகனங்களின் டிரைவராக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். இவர் தனியார் பஸ்ஸில் டிரைவராக பணியாற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பலர் இந்த பெண்ணை பாராட்டியும் வாழ்த்துக்களை தெரிவித்தும் வந்தனர். பல அரசியல் தலைவர்கள் இந்தப் பெண் ஓட்டிச் செல்லும் பஸ்ஸில் பயணித்து அவருக்கு இன்ப அதிர்ச்சிகளை கொடுத்தனர். இவரது துணிச்சலை பாராட்டி பலர் அவருக்கு ஊக்கமளித்தனர். இதனால் ஷர்மிளாக இன்டர்நெட்டில் பிரபலமானார். இந்நிலையில் கனிமொழி எம்பி இவரது பஸ்ஸில் பயணித்த போது ஒரு பிரச்சனை ஏற்பட்டது.
அப்பொழுது அதே பஸ்ஸில் பெண் கண்டக்டராக பணியாற்றிய பெண் ஒருவர் எம்பி கனிமொழியிடம் டிக்கெட் கேட்டதாகவும் இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டதாகவும் கூறி ஷர்மிளா தனியார் பஸ் நிறுவனத்திலிருந்து தனது டிரைவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து ஷர்மிளா மீதும் பஸ் கம்பெனி உரிமையாளர் மீதும் மாறி மாறி விமர்சனங்கள் இருந்து வந்தன. இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் கமலஹாசன் ஷர்மிளாவை அவரது பெற்றோருடன் நேரில் வரவழைத்து அவருக்கு சொந்தமாக டிராவல்ஸ் நடத்த கார் ஒன்றை பரிசாக அளிப்பதாக உறுதியளித்தார்.
மேலும் அவருக்கு பிடித்த காரை புக் செய்ய ரூ 3 லட்சம் அட்வான்ஸ் செக் கொடுத்ததாகவும் தெரிகிறது. அப்பொழுது ஷர்மிளா அவரது குடும்பத்தினருடன் கமலஹாசனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. நடிகர் கமலஹாசன் தனது கமல் பண்பாட்டு மையம் சார்பில் இந்த பரிசை ஷர்மிளாவிற்கு வழங்கினார்.

இந்நிலையில் ஷர்மிளா எந்த காரை வாங்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்தது. அவர் இந்த காரை வாங்கி சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி தொழில் முனைவோராக மாறப் போகிறார் என்பதால் பலர் இவர் மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது இவர் மஹிந்திரா நிறுவனத்தின் மராஸோ என்ற காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த காருக்கான ரூபாய் 3 லட்சம் போக மீதம் உள்ள பணத்தை நடிகர் கமலஹாசனை செலுத்தி விட்டதாக தெரிகிறது. மஹிந்திரா மராஸோ கார் டிராவல்ஸ் தொழில் நடந்த சிறந்த காராக சமீப காலமாக பார்க்கப்படுகிறது.
இந்த காரைப் பொறுத்தவரை மொத்தம் எம்2, எம்4,எம்6 ஆகிய மூன்று விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. டிராவல்ஸ் நடத்த எம்2 வேரியன்ட் காரை சிறந்த காராக இருக்கும். இந்த காரை தான் ஷர்மிளாவும் பரிசாகப் பெற்று உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மஹிந்திரா மராஸோ காரின் இன்ஜினை பொருத்தவரை 1497 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120.96 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் ஒரு 7 சீட்டர் வகை காராக இருக்கிறது. குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிக்க ஏற்ற கார் இது.
இந்த மஹிந்திரா மராஸோ எம் 2 காரில் மல்டி ஃபங்சன் ஸ்டியரிங் வீல், பவர் அட்ஜஸ்டபிள் திறன் கொண்ட வெளிப்பக்க ரியர் கண்ணாடி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஏபிஎஸ், அலாய் வீல்கள், முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஃபாக் லைட்டுகள்., பவர் விண்டோ உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
இந்த மஹிந்திரா மராஸோ எம் 2 காரின் விலையை பொருத்தவரை எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ 13.71 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் ஆன்-ரோடு விலையை பார்க்கும் போது ரூ 16.25 லட்சம் வரை சென்று விடும். இந்த கார் மொத்தம் அக்வா மரைன்,ஓசனிக் பிளாக்,ஐஸ் பெர்க் ஒயிட் மற்றும் ஷிம்மரிங் சில்வர் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த கார் ஒரு லிட்டர் டீசலுக்கு 17.3 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என சான்று அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரை டிராவல்ஸ் பயன்பாட்டுக்கு அதிகம் பயன்படுத்துவார்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்ல பலர் இந்த காரை அதிகம் விரும்புவார்கள். இந்த காருக்கு டிராவல்ஸ் துறையில் நல்ல டிமாண்ட் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெண் டிரைவர் ஷர்மிளாவிற்கு உதவி செய்த நினைத்த நடிகர் கமல் ஏதோ உதவி செய்தோம் என சாதாரண குறைந்த விலை காரை வாங்கி பரிசளிக்காமல் நல்ல காரை தேர்வு செய்து பரிசளித்ததற்கு நாம் நிச்சயம் அவரை பாராட்டியாக வேண்டும். இந்த மஹிந்திரா மராஸோ காருக்கு காவல்துறையில் நல்ல டிமாண்ட் இருப்பதால் ஷர்மிளா தொடர்ந்து தனது தொழிலை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications









