தயவு செஞ்சி கார்களை இந்த இடங்களுக்கு எல்லாம் ஓட்டி போகாதீங்க... மொத்தமா பத்து கார்களை தூக்கிட்டாங்க...
டிரெக்கிங் போறது, ஆஃப்-ரோடு டிராவல் செய்வது எல்லாம் சமீப காலமாக வாகன ஆர்வலர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்காக ஒரு சிலர் அருகாமையில் உள்ள மலைப் பாதைகளைத் தேர்வு செய்கின்றனர். ஒரு சிலர் தங்கள் கிராமத்திலேயே இருக்கும் சகதி மற்றும் பாறைகள் நிறைந்த பகுதிகளைத் தேர்வு செய்கின்றனர்.
வழக்கமான சாலைகளைக் காட்டிலும் இங்குதான் மிகவும் உற்சாகமான ரைடு அனுபவத்தைப் பெற முடியும் என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். இத்தகைய ஓர் அட்வென்சர் பயணத்தில் ஈடுபட்டதற்காகவே சுமார் 10 சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், 15க்கும் மேற்பட்டோரை அவர்கள் கைது செய்திருக்கின்றனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன? அப்படி என்ன மாதிரியான விதி மீறலில் அந்த நபர்கள் ஈடுபட்டனர்? என அனைத்து விபரங்களைதான் இந்த பதவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஏதாவது புதுசா செய்து என்ஜாய் செய்ய வேண்டும் என்கிற மன நிலையைக் கொண்டவர்களாகவே இன்றைய கால இளைஞர்கள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இதற்காக, விபரீதமான செயல்களைகூட அவர்கள் சிறிதும் தயக்கம் இன்றி அசால்டாக செய்துவிடுகின்றனர். இதற்கு சான்றாக இணையத்தில் வீடியோக்கள் பல இருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே ஜாலி ரைடு செய்த பத்து சொகுசு கார்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அட்வென்சரில் பயணித்தில் ஈடுபட்ட சுற்றுலாப் பயணிகள் 15 பேரையும் வனத்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொதுவாக அடர்ந்த வன பகுதிக்குள் மனிதர்கள் செல்வதற்கே தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. வன விலங்குகளின் நடமாட்டத்திற்கும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தும் ஏற்படும் என்கிற காரணத்திற்காகவே இத்தகைய தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும் ஒரு சிலர் காட்டுக்குள் சென்று மது அருந்துவது, நண்பர்களுடன் டிரெக்கிங் செய்வது மற்றும் கேம்ப் அமைப்பது போன்ற செயல்களைச் செய்து வருகின்றனர்.

அவ்வாறு போயிட்டு வருபவர்கள் போன வேலையை மட்டும் பார்ப்பது இல்லை. சில நேரங்களில் வன விலங்கு வேட்டையில் ஈடுபடுதல், மனித விலங்கு மோதலை உருவாக்குதல் மற்றும் காட்டு தீயை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதுண்டு. இதன் காரணத்தினாலேயே குறிப்பிட்ட சில காடுகள் பாதுகாப்பட்ட வனபகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு மனிதர்கள் செல்லவே தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அந்த மாதிரியான பாதுகாக்கப்பட்ட வன பகுதிக்குள்ளேயே நண்பர்கள் சிலர் இணைந்து ஆஃப்-ரோடு பயணத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த செயலுக்காகவே வனத்துறை அதிகாரிகள் அனைத்து கார்களையும் தற்போது பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றனர். காட்டுக்குள் மனிதர்கள் நுழைவதால் பலவிதமான மாற்றங்களும், பின் விளைவுகளும் ஏற்படுகின்றன.

மரங்கள், துளிர் விடும் அரிய வகை செடிகள் என அனைத்தும் அழிய நேரிடுகின்றது. இந்த மாதிரியான சூழலில் ஓர் சிறிய கார் ரேலியையே சுற்றுலா பயணிகள் செய்திருக்கின்றனர். இதனாலேயே அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்கிற நோக்கில் அனைத்து கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
கர்நாடகா மாநிலத்திலேயே இந்த கார் பறிமுதல் சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. இங்குள்ள ஹஸ்ஸன் மாவட்டத்தில் ஹனபாலு ஹோபலி ஆச்சரடி எனும் கிராமம் அமைந்திருக்கின்றது. அழகிய வன பகுதியால் சூழ்ந்ததே இந்த கிராமம் ஆகும். ஆகையால், பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் இருந்து இங்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
குறிப்பாக மூர்கனி குட்டா எனும் வன பகுதியைக் காண்பதற்காக ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். இங்கு குறிப்பிட்ட சில பகுதிகள் பாதுகாப்பட்ட வனபகுதியாகும். அரிய வகை செடி, கொடி மற்றும் மரங்கள், இதுதவிர வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனாலேயே அங்கு மனிதர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மாதிரியான ஓர் தடை செய்யப்பட்ட வன பகுதிக்குள்ளேயே கார் உரிமையாளர்கள் சிலர் தடையை மீறி வாகனங்களில் சென்றிருக்கின்றனர். அவர்கள் பயணித்தது துளியளவும் வாகன இயக்கத்திற்கு உகந்தது அல்லாத காட்டுப்பகுதி ஆகும். இங்கு சிறிய தவறு செய்ய நேரிட்டாலும், பெரும் ஆபத்து ஏற்பட்டு விடும்.
அதிலும், இந்த வாகன ஓட்டிகள் மழை நேரத்தில் வன பகுதிக்குள் அஜாக்கிரதையான பயணத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இது கடுமையான நடவடிக்கையை வன துறையினர் எடுக்க கூடுதலாக காரணமாக அமைந்திருக்கின்றது. கர்நாடகா வன சட்டம் 1963ன் கீழே வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.
உள்ளூர் வாசிகள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சொகுசு கார்களில் இளைஞர்கள் ஆஃப்-ரோடிங்கில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை காவலர்கள் அனைவரையும் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வனப் பகுதியில் அமைந்திருக்கும் எஸ்டேட் ஒன்றிற்கு வந்தவர்கள் என கூறப்படுகின்றது.
ஏற்கனவே அந்த எஸ்டேட் உரிமையாளரை இதுகுறித்து பலமுறை எச்சரித்தும், அவர் தன்னுடைய கெஸ்ட்டுகளை வனப் பகுதி வாயிலாக அழைத்து வந்து இருக்கின்றார். இந்த நிலையிலேயே அடுத்த சம்பவம் நேராமல் இருக்க வேண்டும் என்பதன் பேரில் கார் பறிமுதல் மற்றும் கைது என்கிற கடுமையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காட்டுக்குள் தங்க வேண்டும் என்பதற்காக சிலர் இன்ஸ்டா ரீல்ஸ், யுட்யூப் வீடியோ என சிலவற்றை பார்த்துவிட்டு சுற்றுலா செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களே இதுபோன்று வனத்துறையினரால் பாதிப்படைகின்றனர். தனியார் ரிசார்ட்டுகள் செய்யும் போலியான விளம்பரங்களைச் செய்து இதுபோன்று சிக்கல்களில் சிக்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications









