அரசு பணத்தில் காஸ்ட்லியான காரை வாங்கிய சித்தராமையா! விலை எவ்ளோனு தெரிஞ்சா மயக்கமே போட்றுவீங்க

கர்நாடக மாநில முதல்வராக அறிவிக்கப்பட்டவுடன் அவருக்காகக் கர்நாடக அரசு டொயோட்டா வெல்ஃபயர் காரை வாங்கியுள்ளது. இந்த கார் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தவுடன் முதல்வர் யார் என்ற கேள்விக்கு நீண்டநாட்களாக இழுபறியிருந்து வந்த நிலையில் சித்தராமையா தான் முதல்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது பயன்பாட்டிற்காகக் கர்நாடக அரசு புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரை வாங்கியுள்ளது.

siddaramaiah vellfire

இனி இவர் எங்குச் சென்றாலும் இந்த டொயோட்டா வெல்ஃபயர் காரில் செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த காரை பொருத்தவரை டொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் எம்பிவி கார். டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் தயாரிப்பு ஆலையை வைத்திருந்தாலும் இந்த காரை அவர்கள் இந்தியாவில் தயாரிப்பதில்லை. இந்த கார் இந்தியாவில் முற்றிலும் தயாரிக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த காரின் வெளிப்புறத்தோற்றம் அதிகமான க்ரோம் அம்சங்களை கொண்டிருக்கும். இந்த காரில் கிக்னாடிக் புரபோசிஷன் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 117 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். ஹைபிரிட்டாக முன்பக்க வீலில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக்கல் மோட்டார் 143 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். பின்பக்க வீலில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் 68 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

siddaramaiah vellfire

இந்த காரில் ஒவ்வொரு ஆக்ஸிலுக்கும் தனித்தனி எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 16.35 கி.மீ மைலேஜை வழங்கும் திறன் கொண்டது. இந்தியாவில் அதிகமான மைலேஜ் வழங்கும் எம்பிவி கார் இது தான். இந்த எலெக்ட்ரிக் மோட்டார் பேட்டரியில் ரீஜெனரேட்டிவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் மார்கெட்டில் உள்ள மிக ஃபவர்புல் கார்களில் இதுவும் ஒன்று.

பொதுவாக ஒரு மாநில முதல்வர் பதவியேற்றால் அவருக்குப் பிரத்தியேகமாக அரசு சார்பில் கார் வழங்கப்படுவது வழக்கம் தான். அவர் ஒரு மாநிலத்தில் முதல்வர் என்பதால் பாதுகாப்பான காரை தான் அவருக்கு வழங்குவார்கள். அதே நேரத்தில் அவர் பயண நேரத்திலும் தனது அலுவல் பணிகளைப் பார்க்க வேண்டியது இருக்கும் அதனால் அதிக வசதிகள் கொண்ட காராக தான் வாங்குவார்கள்.

இந்த டொயோட்டா வெல்ஃபயர் காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை என்கேப் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளது. இந்த காரில் 7 ஏர்பேக் உள்ளது. இது போக இந்த காரில் சீல் பெல்ட் வார்னிங், சைல்டு லாக், குழந்தைகளுக்கான சீட்களுக்கான ஆங்கர் பாயிண்ட், ஓவர் ஸ்பீடு வார்னிங், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், அண்டி லாக் தெஃப்ட் இன்ஜின் இம்மொபிலைஸர், ஃப்ளாஷிங் எம்ர்ஜென்ஸி பிரேக் லைட், சென்டரல் லாக்கிங் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த கார் 4935 மிமீ நீளம், 1850 மிமீ அகலம், 3000 மிமீ வீல் பேஸ் கொண்டது. இந்த காரில் பவர் ஸ்டியரிங், முன்பக்கம் பவர் விண்டோ, பவர் பூட், 3வது வரிசை சீட் பவர் ஃபோல்டிங், 3 சோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஏர் குவாலிட்டி கண்ட்ரோல், பின்பக்க ஏசி வென்ட், முன்பக்க ஹீட்டெட் சீட், சென்டர் கன்சோல் ஆர்ம் ரெஸ்ட்க்கு கீழே ஸ்டோரேஜ் வசதி ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு மாநில முதல்வருக்கு நிச்சயம் பாதுகாப்பான, வசதிக் கார் என்பது அவசியமான ஒன்று. அதற்காக தான் கர்நாடக அரசும் சித்தராமையாவிற்காக இந்த காரை வாங்கியுள்ளது. இந்த கார் நிச்சயம் அவருக்கு உதவியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, May 19, 2023, 12:40 [IST]
English summary
Karnataka govt buys toyota vellfire mpv for new cm siddaramaiah
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+