ஒரு கோடி ரூபாயுடன் சேர்த்து காரையும் வென்ற இளைஞர்... இந்த காரையா பரிசா கொடுத்திருக்காங்க! இது செம்மப்பா!
இந்தியாவின் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் 'கோன் பனேகா குரோர்பதி' (Kaun Banega Crorepati)-ம் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியின் 15 வது சீசன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், அது தற்போது நிறைவுற்று இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜஸ்கரன் சிங் என்பவரே தற்போது ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றிருக்கின்றார்.
இந்த பெரும் தொகை பரிசுடன் சேர்த்து அவருக்கு இந்தியாவின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காரே அவருக்கு போனஸ் பரிசாக ஹூண்டாய் (Hyundai Motor) நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த கார் பரிசளித்திருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றான டாடா பஞ்ச் மாடலுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கும் ஓர் கார் மாடலே ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகும்.
ரூ. 7 கோடி பரிசு தொகைக்கான கேள்வியை சரியாக கூறி இருந்தால் ஜஸ்கரன் சிங்கிற்கு ஹூண்டாய் வெர்னா செடான் (Hyundai Verna Sedan) ரக கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கும். இந்த வாய்ப்பை நகர விட்ட நிலையிலேயே அவருக்கு எக்ஸ்டர் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி-யின் உயர்நிலை தேர்வான எஸ்எக்ஸ் (ஓ) கன்னெக்ட் ட்ரிம் (SX(O) Connect trim)-மே அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஃபுல்லி லோடட் (Fully Loaded) ரக தேர்வு ஆகும். அதாவது, அதிக அளவு சிறப்பம்சங்களைத் தாங்கிய தேர்வாகும்.
8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களையும் இந்த காரில் ஹூண்டாய் மிக தாராளமாக வழங்கி இருக்கின்றது
அந்தவகையில், உயர் வகை பாதுகாப்பை வழங்குகின்ற ஆறு ஏர் பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்டு இருக்கை மவுண்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (இஎஸ்சி), இரண்டு டேஷ் கேமிராக்கள் மற்றும் ரியர் வியூ கேமிரா என ஏகப்பட்ட சேஃப்டி அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுபோன்ற ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் இடம் பெற்றிருப்பதாலோ என்னமோ இந்தியர்கள் மத்தியில் மிக சூப்பரான வரவேற்பு அக்காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஹூண்டாய் எக்ஸ்டர் ரூ. 6 லட்சம் தொடங்கி ரூ. 10.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த கார் டாடா பஞ்ச் காருக்கு மட்டுமல்ல ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், சிட்ரோன் சி3 மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஆகியவற்றிற்கும் இதன் வருகை போட்டியாக இருக்கின்றது. ஹூண்டாய் எக்ஸ்டர் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய மோட்டார் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும்.
அந்தவகையில், 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரிலேயே இரு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இத்தகைய சூப்பரான காரையே போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக ஹூண்டாய் எக்ஸ்டர் மாறி இருக்கின்றது. இதற்கு அந்த காரின் மலிவு விலையே ஓர் மிக முக்கியமான காரணம் ஆகும். இத்தகைய ஓர் கார் பரிசாக வழங்கப்பட்டு இருப்பதே பலருக்கு ஆச்சரியமாக அமைந்திருக்கின்றது. ஆகையால், தற்போது அவர் கோடீஸ்வரர் மற்றும் எக்ஸ்டர் காரின் உரிமையாளராகவும் மாறி இருக்கின்றார்.


Click it and Unblock the Notifications