எந்த மாற்றமும் செய்யாமல் விலையை மட்டும் அதிகரித்து அறிமுகமான கவாஸாகி இசட்எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ பைக்குகள்

கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் சூப்பர் பைக்குகளை தயாரிக்கும் பிரபலமான நிறுவனம். இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது 2023 கவாஸாகி இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ ஆகிய பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகள் குறித்த தகவல்கள் மற்றும் விலை விபரங்களை விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்த 2023 கவாஸாகி இச்ட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ ஆகிய பைக்குகளில் பழைய வெர்ஷனிலிருந்து பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. இதன் இன்ஜினை பொருத்தவரை அதே கவாஸாகி இசட் சிரீஸில் பயன்படுத்தும் 998 சிசி இன்-லைன் 4 சிலிண்டர், லிக்யூட் கூல்டு சூப்பர் சார்ஜ்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

எந்த மாற்றமும் செய்யாமல் விலையை மட்டும் அதிகரித்து அறிமுகமான கவாஸாகி இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ பைக்குகள்

இந்த இன்ச் 197 பிஎச்பி பவரை 11 ஆயிரம் ஆர்பிஎம்மிலும், 137 என்எம் டார்க் திறனை 8500 ஆர்பிஎம்மிலும் வழங்குகிறது. இந்த பைக்களில் மிக முக்கிய அம்சமாக இசட் எச்2 பைக்கின் முன்பக்க வீலில் பிரெம்போ எம்4.32 பிரேக் கேலிபரும், இசட் எச்2 எஸ்இ பைக்கின் முன்பக்க வீலில் பிரெம்போ ஸ்டைலிமா பிரேக் கேலிபரும் பொருத்தப்பட்டுள்ளது.

இது போக இந்த பைக்குகளில் எலெக்ட்ரானிக் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் த்ராட்டல் வேல்யூஸ், ரைடிங் மோட்கள், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ரேடியாலஜி ஆப் வழியாக ஸ்மார்ட் போன் கனெக்டிவிட்டி ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

இந்த 2023 கவாஸாகி இசட் எச் 2 பைக்கில் க்விக் ஸ்விஃப்டர், எலெட்ரானிக்கலி அட்ஜெஸ்ட்டபுள் சஸ்பென்சன், லாஞ்ச் கண்ட்ரோல், கார்னரிங் மேனேஜ்மென்ட் ஃபங்சன், டிராக்ஷன் கண்ட்ரோல், கவாஸாகி இன்டெலிஜென்ட் ஆண்டிலாக் பிரேக்ஸ், 6 ஆக்ஸிஸ் ஐஎம்யூ, ஆகியு அம்சங்கள் எல்லாம் இந்த பைக்கில் இருக்கிறது.

இந்த இசட் எச்2எஸ் எஸ்இ பைக்கை பொருத்தவரை ஷோவாஸ் ஸ்கை ஹூக் டெக்னாலஜியில் இயங்கும் எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்பென்சன், மட்டும் பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. இது போக இசட் எச்2 பைக்கில் உள்ள எல்லா அம்சங்களும் இந்த பைக்கிலும் இருக்கிறது.

ஸ்டைலிங்கிலும் இந்த இரு பைக்குகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ட்வின் எல்இடி ஹெட்லைட், ஸ்டீல் டிரையல் ஃபிரேம்ஸ் மற்றும் அலுமினியம் ஸ்விங் ஆர்ம், இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸஅ இ ஆகிய பைக்கில் நின்ஜா எச்2 மற்றும் எச்2ஆர் ஆகிய பைக்குகளில் உள்ள ஐகானிக் கவாஸாகி ரிவர் மார்கை பெற்றுள்ளது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த இசட் எச்2 மற்றும் இசட் எச்2 எஸ்இ ஆகிய இரண்டு பைக்குகளும் பில்டு டூ ஆர்டர் என்ற அடிப்படையில் விற்பனை செய்கின்றனர். அதாவது வாடிக்கையாளர் வந்து தனக்கு இந்த பைக் வேண்டும் என கவாஸாகி நிறுவனத்திடம் கேட்டு அதற்கான முழு பணத்தையும் செலுத்தி பின்பு தான் இந்த பைக்கையே தயாரித்து வழங்குவார்கள்.

இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை கவாஸாகி இசட் எச்2 பைக் ரூ23.02 லட்சம் என்ற விலையிலும் கவாஸாகி இசட் எச்2 எஸ்இ பைக் ரூ27.22 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இந்த இரு ஸ்டிரீட் ஃபைட்டர் பைக்குகளும் மெட்டாலிக் மேட் கிராஃபின் ஸ்டீல் க்ரே ஷேட் கலரில் மட்டுமே வருகிறது.

தற்போது அப்டேட் செய்யப்பட்டு வந்துள்ள இந்த இரண்டு பைக்கிலும் வித்தியாசம் என்பது அதன் விலை ரூ30 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது தானே தவிர மற்றபடி எந்த வித்தியாசமும் செய்யப்படவில்லை. இந்த பைக்கிற்கான புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. முழு பணத்தையும் செலுத்தி புக்கிங் செய்ய வேண்டும்.

இந்த பைக்கை கவாஸாகி டீலர் ஷிப்களில் புக்கிங் செய்யலாம். இந்த பைக் மார்கெட்டில் டுகாட்டி ஸ்டிரீட் ஃபைட்டர் வி4 ஏப்ரில்லா டியூனோ வி4, பிஎம் டபிள்யூஎஸ் 1000 ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 11, 2023, 9:37 [IST]
English summary
Kawasaki launched 2023 z h2 and z h2 se in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+