டிஜிட்டல் ஓடோ மீட்டரையும் டேம்பரிங் பண்ணுறாங்க! கேரளாவில் பிடிபட்ட கார் டீலர் செய்த கூத்து!
கேரளாவில் பயன்படுத்தப்பட்ட கார் டீலர் காரின் ஓடோ மீட்டரை டேம்பரிங் செய்ததால் அவருக்கு ரூ1 லட்சம் அபராதம் விதித்து மோட்டார் வாகன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான பெரிய சந்தையாக இருக்கிறது. முதன்முறையாக கார் வாங்கும் பலர் பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில் தான் பெரும்பாலும் காரை வாங்குகின்றனர். அவர்கள் அந்த காரை ஓட்டி பயன்படுத்தி அவர்களுக்கு நம்பிக்கை வந்த பிறகு தான் பெரும்பாலும் புதிய காரை வாங்குகின்றனர். பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு அதுவும் குறைவாக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது.

இதில் நடக்கும் மிகப்பெரிய ஏமாற்று வேலை என்றால் ஓடோ மீட்டரை டேம்பரிங் செய்வது, பயன்படுத்தப்பட்ட கார் மார்கெட்டில் ஒரு காருக்கான விலை அது எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை பொருத்தே முடிவு செய்யப்படுகிறது. இப்படியாக ஒரு கார் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அதன் ஓடோ மீட்டரில் தான் கண்டுபிடிக்க முடியும். கார் எத்தனை கி.மீ வரை ஓட்டப்பட்டுள்ளது என்பது அதில் தெரியும்.
அதில் குறிப்பிட்ட கி.மீ ஒரு முறை டயரை மாற்றுவது,காரின் மற்ற உதிரிபாகங்களை மாற்றுவதை எல்லாம் கணக்கிட்டு காரின் கண்டிஷனை பொறுத்து விலையை நிர்ணயம் செய்வார்கள். இதனால் கார் அதிக விலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக சில ஏமாற்ற கார கார் டீலர்கள் காரின் ஓடோ மீட்டரில் ஓடிய நம்பரை குறைவாக ஓடியபடி டேம்பரிங் செய்வார்கள். இப்படியாக செய்வது பயன்படுத்தப்பட்ட கார் மார்கெட்டில் அதிகம் நடக்கிறது.
இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொடுங்கலூர் பகுதியில் ஒருவர் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் டீலிங் பிஸ்னஸ் நடத்தி வந்துள்ளார். இவர் சமீபத்தில் குருவாயூருக்கு தன்னிடம் உள்ள கார் ஒன்றை வாடிக்கையாளருக்கு டெமோ காண்பிக்க ஓட்டி சென்றுள்ளார். அப்பொழுது மதிலகம் பகுதியில் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் இந்த காரை பார்த்த போது இது செகண்ட் ஹேண்டில் விற்பனைக்கு செல்லும் கார் என்பதை அறிந்து அதை சோதனை செய்துள்ளனர். காரை அதிகாரிகள் வாங்கி சாலையில் சிறிது தூரம் ஓட்டி பார்த்துள்ளனர். காரின் ஓடோ மீட்டர் ஓடாமல் கி.மீ. அதிகமாகமல் அப்படியே இருந்துள்ளது. இதன் மூலம் காரின் டீலர் ஓலோ மீட்டரை டேம்பரிங் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார்வாகன அதிகாரிகள் குறிப்பிட்ட கார் டீலருக்கு ரூ1,04,750
அபராதமாக விதித்தனர்.
இந்தியாவில் இப்படியான மோசடி வேலை அதிகமாக நடக்கிறது. கார்களில் தற்போது 2 விதமான ஓடோ மீட்டர்கள்வந்துவிட்டன. பழைய அனலாக் வகை ஓடோ மீட்டர், மற்றும் புதிய டிஜிட்டல் ஓடோ மீட்டர், தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான கார்களில் பழைய அனலாக் வகை ஓடோ மீட்டர்கள் தான் இருக்கிறது. புதிய டிஜிட்டல் மீட்டர்கள் ஒரு சில விலையுயர்ந்த கார்களில் மட்டுமே உள்ளன. பழைய அனலாக் வகை ஓலோ மீட்டரை மிக சுலபமாக டேம்பரிங் செய்து விடுகின்றனர்.
கார் மெக்கானிக்கள் சுலபமாக ஸ்க்ரூ டிரைவர் மூலம் ஓடோ மீட்டரின் கண்ணாடியை அகற்றி அதை அவர்களிடம் உள்ள சிறிய கருவிகள் மூலம் ஓலோ மீட்டரின் ஓடியுள்ள இலக்கங்களை கீழே தள்ளி குறைவாக ஓடியது போல மாற்றிவிடுகின்றனர். இதனால் ஒரு வாகனம் 1 லட்சம் கி.மீ. ஓடினாலும் 10 ஆயிரம் கி.மீ தான் ஓடியதாக காண்பிடிக்க முடியும். இதன் மூலம் அந்த காரின் விலையை மிக அதிகமாக ஏற்றி விற்பனை செய்கின்றனர்.
இப்படியாக கார் ஓடோ மீட்டர் டேம்பரிங் செய்யப்பட்டுள்ளதை கண்டறிய ஒரே வழி தான் உள்ளது காரின் ஓடோ மீட்டரில் முதல் இலக்கம் மட்டுமே நாம் காரை ஓட்ட ஓட்ட நகர்ந்து ஒரு அலைன்மெண்ட் இல்லாமல் இருக்கும் மற்ற இலக்கங்கள் எல்லாம் சரியான அலைன்மெண்டில் இருக்கும். ஒரு வேலை நீங்கள் செகண்ட் ஹேண்டில் கார் வாங்கும் போது அதன் ஓடோ மீட்டரில் முதல் இலக்கத்தை தவிர மற்ற இலக்கங்கள் அலைன்மெண்டில் இல்லை என்றால் அது டேம்பரிங் செய்யப்பட்டுள்ளது என அர்த்தம்!
அதே போல டிஜிட்டல் ஓடோ மீட்டரும் ஒன்றும் டேம்பரிங் செய்ய முடியாத ஒன்று கிடையாது. இன்று இருக்கும் நவீன டெக்னாலஜியில் இதையும் டேம்பரிங் செய்ய முடியும். இது அனலாக் ஓடோ மீட்டரை விட ஆபத்தானது. இதில் டேம்பரிங் செய்தால் அனலாக் மீட்டரிலாவது டிரேஸ் தெரியும். ஆனால் இது முழுவதும் எலெக்ட்ரானிக் முறை டேம்பரிங் என்பதால் அடையாளமே தெரியாது. இந்த முறையில் டேம்பரிங் செய்தால் ஓடோ மீட்டரை தனியாக கழட்டி அதை லேப்டாப் உடன் இணைத்து கி.மீ ஓடியதை ரீசெட் செய்துவிடுவார்கள்.
இப்படி செய்தால் அதை கண்டுபிடிப்பது சிரமம். ஓடோ மீட்டரை கழட்டி விட்டு மாட்டும் போது சரியாக மாட்டாமல் இருப்பது அல்லது மாட்டிய இடத்தில் ஸ்க்ரூடிரைவர் மார்க் இருப்பது உள்ளிட்ட விஷயங்கள் இருந்தால் அந்த டிஜிட்டல் ஓடோ மீட்டரும் டேம்பரிங் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








