கருப்பு நிற 5 கோடி ரூபா காரை வாங்கிய கேஜிஎஃப் நடிகர் யாஷ்! ஒத்த காரால இந்தியாவையே திரும்பி பார்க்க வச்சுட்டாரு
கேஜிஎஃப் நடிகர் யாஷ் புதிதாக மிக மிக விலை உயர்ந்த காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் வாங்கி இருப்பது என்ன கார்? அதன் விலை எவ்வளவு என்கிற அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கேஜிஎஃப் பட நடிகர் யாஷ் மிக உயரிய விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் படங்கள் சில வெளியாகி இருக்கின்றன. யாஷ் ஓர் புத்தம் புதிய காரை குடும்பத்துடன் டெலிவரி எடுப்பது போன்ற படமே தற்போது வெளியாகி இருக்கின்றது.

நடிகர் வாங்கி இருப்பது லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு எஸ்யூவி காராகும். இந்தியாவில் இந்த காருக்கு மிகப் பெரிய வரவேற்பு உண்டு. இதன் விலை லட்சங்களைக் கடந்து கோடியில் உள்ளது. இருப்பினும், அதன் அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக லக்சூரி வசதிகளுக்காக இந்தியர்களால் மிக அதிக அளவில் வாங்கப்பட்டு வருகின்றது.
நம்முடைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காரையே பயன்படுத்தி வருகின்றார். இந்த அளவிற்கு ஃபேமஸான சொகுசு காரையே தன்னுடைய பயன்பாட்டிற்காக ராக்கி பாய் தற்போது வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த கார் ரூ. 2.39 கோடி தொடங்கி ரூ. 4.17 கோடி வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.
இதில் அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட ஸ்பெஷல் பதிப்பையே யாஷ் வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. கேஜிஎஃப் யாஷ் இடம் ஏற்கனவே பலதரப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் டிஎல்எஸ் 350டி, மெர்சிடிஸ் ஜிஎல்சி 250டி கூபே, ஆடி க்யூ7, பிஎம்டபிள்யூ 520டி, ரேஞ்ச் ரோவர் எவோக், பஜேரோ ஸ்போர்ட் உள்ளிட்ட ஆடம்பர கார்களே அவரிடத்தில் உள்ளன.
இவற்றின் வரிசையிலேயே தற்போது ரூ. 5 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு கார் இணைக்கப்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே பயன்படுத்தி வந்த கார் மாடல்களில் ஏதேனும் வெளியேற்றப்பட்டு இருக்கின்றதா?, அதன் காரணத்தினால்தான் புதிதாக சொகுசு கார் சேர்க்கப்பட்டு இருக்கின்றதா?, என்பது தெரியவில்லை.
இருப்பினும், இனி இந்த ஐந்து கோடி ரூபாய் காரில் யாஷ் தன்னுடைய பயணங்களை மேற்கொள்ள இருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த காரில் ஆடம்பர வசதிகளாக மசாஜ் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட 825 வாட் மெரெடிசியன் சவுண்ட் சிஸ்டம், அனைத்து இருக்கைகளுக்கும் பெரிய பொழுதுபோக்கு திரைகள், பனோரமிக் சன்ரூஃப் என எக்கசக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த காரில் 4.5 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜட் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதவிர 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மற்றும் பெட்ரோல், 4.4 லிட்டர் வி8 டீசல் உள்ளிட்ட மோட்டார் தேர்வுகளிலும் இந்த சொகுசு கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இப்போது இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரே விற்பனையில் இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யாஷைப் போலவே இன்னும் பல நடிகர்கள் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பாலிவுட் திரையுலகினர் மத்தியில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போது தென்னிந்தியாவிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications








