மாருதியின் கதையை முடிக்கக் களம் இறங்கப்போகும் புதிய கியா கேரன்ஸ் கார்! விலை இவ்வளவு தானா?

கியா கேரன்ஸ் கார் இந்தியர்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு கார். தற்போது இந்தியாவில் பிஎஸ் 6 கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டம் வரம் ஏப் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் தனது 1.4 லிட்டர் டர்போ இன்ஜின்களை 1.5 லிட்டர் டர்போ இன்ஜின்களாக மாற்றி வருகின்றன.

இந்நிலையில் கியா நிறுவனத்தின் கேரன்ஸ் காரில் புதிய வேரியன்ட்களை அந்நிறுவனம் வெளியிடப்போவதாக அந்நிறுவனத்தின் டைப் அப்ரூவல் சான்று வெளியாகியுள்ளது. இந்த சான்றின்படி இந்நிறுவனம் என்ட்ரி லெவல் மற்றும் டீசல் வேரியன்ட்டில் ஐஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட வேரியன்ட்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிகிறது.

மாருதியின் கதையை முடிக்கக் களம் இறங்கப்போகும் புதிய கியா கேரன்ஸ் கார்! விலை இவ்வளவு தானா?

தற்போது கியா கேரன்ஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகிய 3 வகையான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக், மற்றும் ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் ஆகிய கியர் பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

அதில் வெளியான டைப் அப்ரூவல் படி 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் உடன் 6 ஸ்பீடு ஐஎம்டி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்ட வேரியன்ட் ஒன்று வெளியாகவுள்ளது. இந்த இன்ஜின் 114 பிஎச்பி பவரை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இதன் மூலம் ஐஎம்டி கியர் பாக்ஸை டீசல் வேரியன்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மாருதியின் கதையை முடிக்கக் களம் இறங்கப்போகும் புதிய கியா கேரன்ஸ் கார்! விலை இவ்வளவு தானா?

இதற்கு முன்னர் கேரன்ஸ் டீசல் வேரியன் காரில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது. புதிய ஐஎம்டி கியர் பாக்ஸை பொருத்தவரை இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனைக்கு வரும் என்றே எதிர்பார்க்கலாம்.

அடுத்ததாக கியா கேரன்ஸ் காரில் புதிய என்ட்ரி -லெவல் 5 சீட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் கார்கள் அறிமுகமாகவுள்ளது தெரியவந்துள்ளது. ஆவணத்தின்படி கியா நிறுவனம் எம்-டிரைவ் மற்றும் பி-டிரைவ் என இதற்குப் பெயரிட்டுள்ளது. இதில் பி-டிரைவ் வேரியன்டை பிரிமியம் செக்மெண்டிற்கு கீழாக போசிஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதியின் கதையை முடிக்கக் களம் இறங்கப்போகும் புதிய கியா கேரன்ஸ் கார்! விலை இவ்வளவு தானா?

எம் டிரைவ் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. ஆனால் இந்த வேரியன்டில் 5 சீட்டர் ஆப்ஷன் கிடையாது. பி-டிரைவ் காரை பொருத்தவரை 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு ஸ்மார்ட்ஸ்டீம் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளியான ஆவணத்தின்படி பெட்ரோல் இன்ஜின் காருக்கு ஐஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இல்லை அதே போல பிரஷ்டீஜ் பிளஸ், லக்ஸரி, லக்ஸரி பிளஸ் ஆகிய வேரியன்ட்களுக்கு 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல்இன்ஜின் ஆப்ஷன் இல்லை. இந்த வேரியன்ட்களில் 1.5 லிட்டர் ஜிடிஐ டர்போ இன்ஜின் மட்டுமே பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது 160 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

மாருதியின் கதையை முடிக்கக் களம் இறங்கப்போகும் புதிய கியா கேரன்ஸ் கார்! விலை இவ்வளவு தானா?

கியா கேரன்ஸ் காரின் புதிய 5 சீட்டர் பி-டிரைவ் வேரியன் கார் ரூ9.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். தற்போது கேரன்ஸ் காரின் குறைந்த விலை வேரியன்ட் என்றால் பிரிமியம் அம்சங்கள் கொண்ட 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 6 ஸ்பீடு மேனுவல் கியர் கார் தான் இது ரூ10.20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

தற்போது அதை விடக் குறைவான விலையில் கேரன்ஸ் கார் களம் இறங்கவுள்ளது. இது களம் இறங்க இன்னும் வெகு காலம் இல்லை. ஏப்1ம் தேதி பிஸ்6 2ம் கட்டம் அமலுக்கு வருவதால் அதற்கும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இந்த காருக்கு நேரடி போட்டியாக மார்கெட்டில் இருப்பது மாருதி எக்ஸ்எல்6 கார் தான்.

மாருதி எக்ஸ்எல்6 காரின் ஆரம்ப விலையைப் பொருத்தவரை மார்கெட்டில் ரூ11.41 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகிறது. இந்த கார் வந்துவிட்டால் மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல்6 காரின் விற்பனை சரிவு ஏற்படும் என கூறுப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை காணலாம் வாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 7, 2023, 12:40 [IST]
English summary
Kia carens diesel imt and 5 seat variant launch soon price and details
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X