ஆம்னி மாதிரி குடும்பமே ஒன்னா போற கார்! சொல்லாம கொள்ளாம திடீர்னு விற்பனையை நிறுத்தீட்டாங்க! அதிர்ச்சியா இருக்கு
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மூன்று வரிசைகளை கொண்ட இந்த கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை (Price) 10.45 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.45 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். செயல்திறனை பொறுத்தவரையில், கியா கேரன்ஸ் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol), 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, 7 ஸ்பீடு டிசிடி மற்றும் டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
அத்துடன் கியா கேரன்ஸ் காரில் ஏராளமான அதிநவீன வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும், கவர்ச்சிகரமாக டிசைன் (Design) செய்யப்பட்டிருப்பதாலும் கியா கேரன்ஸ் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதும் கூட கியா கேரன்ஸ் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

இந்த சூழலில் கியா கேரன்ஸ் காரின் கலர் ஆப்ஷன்களில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கியா கேரன்ஸ் கார் முன்பு மொத்தம் 7 கலர் ஆப்ஷன்களில் கிடைத்து வந்தது. அவை இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் ப்ளூ, அரோரா பிளாக் பேர்ல், ஸ்பார்க்கிலிங் சில்வர், கிராவிட்டி க்ரே, கிளாசியர் ஒயிட் பேர்ல் மற்றும் மோஸ் ப்ரவுன் ஆகியவை ஆகும்.
இதில் மோஸ் ப்ரவுன் கலர் ஆப்ஷனின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் மோஸ் ப்ரவுன் கலர் ஆப்ஷனில் கியா கேரன்ஸ் கார் கிடைக்காது. எனவே மோஸ் ப்ரவுன் தவிர்த்து மற்ற 6 கலர் ஆப்ஷன்களில் மட்டுமே இனி கியா கேரன்ஸ் கார் விற்பனைக்கு கிடைக்கும். மோஸ் ப்ரவுன் கலர் ஆப்ஷனின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மோஸ் ப்ரவுன் கலர் ஆப்ஷன் இனி கிடைக்காது என்றாலும் கூட, அது கியா கேரன்ஸ் காரின் விற்பனையில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றே நாங்கள் கருதுகிறோம். மாறாக வரும் காலங்களில் கியா கேரன்ஸ் காரின் விற்பனை மேலும் உயரும் என்றே நாங்கள் கருதுகிறோம்.
கியா கேரன்ஸ் காரின் சிஎன்ஜி (CNG) வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவிருப்பதுதான் இதற்கு காரணம். தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைத்தாலும் கூட, கேரன்ஸ் காரில் அதிக மைலேஜ் (Mileage) வழங்கும் சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை கியா நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்திய சாலைகளில் கியா கேரன்ஸ் சிஎன்ஜி வெர்ஷன் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டபோது ஏற்கனவே கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் கியா கேரன்ஸ் சிஎன்ஜி வெர்ஷன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








