ஜிபி முத்து கை பட்ட ராசி! விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய கியா கேரன்ஸ்! அடேயப்பா இவ்ளோ பெரிய கை ராசி காரரா!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் முன்னணி எம்பிவி ரக கார் மாடல்களில் கியா கேரன்ஸ் (Kia Carens)-ம் ஒன்றாகும். இந்த காரையே சமீபத்தில் டிக்டாக் புகழ் ஜிபி முத்து வாங்கினார். தன்னுடைய இந்த கார் கொள்முதல் பற்றிய தகவலை அவர், அவருடைய யுட்யூப் சேனலில் வீடியோவை வெளியிட்டு பகிர்ந்துக் கொண்டார்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அவருடைய பாணியில், "மக்களே நான் கார் வாங்கிட்டேன்" அப்படினு பெரிய அன்னவுன்ஸ்மென்டையே கொடுத்திருக்கின்றார். ஜிபி முத்துவின் இந்த கொள்முதலுக்கு பலர் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிலேயே, அதாவது, ஜிபி முத்து கியா கேரன்ஸ் காரை வாங்கி ஒரு சில வாரங்களே ஆகின்ற நிலையில், அந்த கார் மாடல் தற்போது விற்பனையில் இமாலய சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kia carens sale

1 லட்சம் யூனிட் விற்பனை சாதனையையே அந்த கார் எட்டி இருக்கின்றது. இதன் வாயிலாக இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில், குறிப்பாக, ஜிபி முத்துபோன்று நார்மலான மனிதர்கள் மத்தியிலும் கியா கேரன்ஸ் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது துள்ளியமாக தெரிகின்றது.

இந்தியாவின் மலிவு விலை எம்பிவி ரக கார் மாடல்களில் கியா கேரன்ஸும் ஒன்றாகும். இந்த கார் இந்தியாவில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6, ஹூண்டாய் அல்கஸார், மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாகவே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

Kia carens interior design

ஒட்டுமொத்தமாக ஆறு விதமான ட்ரிம்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பிரீமியம், பிரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் பிளஸ், லக்சூரி, லக்சூரி பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன் ஆகியவையே அவை ஆகும். இதேபோல், எஞ்ஜின் விஷயத்திலும் மூன்று விதமான ஆப்ஷன்களும், கியர்பாக்ஸ் விஷயத்தில் நான்கு விதமான ஆப்ஷன்களும் கியா கேரன்ஸில் வழங்கப்படுகின்றன.

1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளிலேயே கியா கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைக்கிறது. நிறத் தேர்வு எக்கசக்கம் என்பது குறிப்பிடத்தகுந்தது. சிங்கிள் டோன் நிற தேர்வில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 8 விதமான ஆப்ஷன்கள் இதில் வழங்கப்படுகின்றன.

Kia carens sale milestone

இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 10.44 லட்சம் ஆகும். அதேவேளையில், இதன் உச்சநிலை வேரியண்டின் விலை ரூ. 18.94 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. விலை அதிகம் கொண்ட தேர்வில் அதிகம் பிரீமியம் தர அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிக் கொண்டது), 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், 64 நிறங்கள் கொண்ட ஆம்பியண்ட் மின் விளக்கு மற்றும் ஓடிஏ மேப் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.

இதுதவிர, கார் இணைப்பு வசதி, ஏர் ப்யூரிஃபையர், ஏர் வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள், மூன்றாவது வரிசை இருக்கையாளர்களக்கு என தனி ஏசி வெண்ட்டுகள், மிருதுவான மற்றும் சௌகரியமான இருக்கைகள், அட்ஜஸ்டபிள் ஹெட்ரெஸ்ட் உள்ளிட்ட வசதியையும் கியா கேரன்ஸ் கொண்டிருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களாக ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராக்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், டவுன்ஹில் பிரேக்கிங் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் முன்-பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் மற்றும் ஐசோஃபிக் சைல்டு சீட்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜிபி முத்து கை ராசி காரரா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், மேலே பார்த்தது போன்ற ஏகப்பட்ட அம்சங்களைத் தனக்குள் தாங்கி இருப்பதனாலேயே கியா கேரன்ஸ் காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அது மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைப்பதும் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க மற்றுமொரு முக்கியமான காரணமாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 11:30 [IST]
English summary
Kia carens sales hits 1 lakh unit milestone in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X