ரொம்ப நாளாக இதை எதிர்பார்த்தாங்க! இப்ப கியா சொன்ன செம அப்டேட் தகவலால் ரசிகர்கள் குஷி!
இந்தியாவில் வரும் ஏப்1ம் தேதி முதல் பிஎஸ்6 மாசுக் கட்டுப்பாட்டின் 2ம் கட்டமான ரியல் டிரைவிங் எமிஷன் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் இன்ஜின்களை அதற்குத் தகுந்தார் போல மாற்றி வருகின்றனர். இந்நிலையில் கியா நிறுவனமும் அதற்காகத் தயாராகி வருகிறது.
கியா நிறுவனம் தனது நிறுவனம் அதிகம் விற்பனை செய்யும் சோனட், கேரன்ஸ், செல்டோஸ ஆகிய கார்களில் சில அப்டேட்டகளளுடன் புதியதாக கட்டுப்பாடுகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவுள்ளது. அப்படி என்ன புதிய அப்டேட்கள் வரவுள்ள வாருங்கள் காணலாம்.

சோனட் - Sonet
சோனட் கார் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் இதில் புதிய அப்டேட்டாக அட்ஜெஸ்டபுள் ரியர் ஹெட்ரெஸ்ட் மற்றும் ஐஎஸ்ஓ சைல்டு சீட் மவுண்ட் ஆகியன ஸ்டாண்டாக கொண்டு வரப்படுகிறது. மேலும் நடுவில் உள்ள பயணிகளுக்காக ஹெட்ரெஸ் மற்றும் 3 பாயிண்ட் சீட் பெல்ட் வருகிறது. இது போக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் என்பது அனைத்து டீசல் வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாக வருகிறது.
கேரன்ஸ் - Carens
கியா கேரன்ஸ் எம்பிவி காரை பொருத்தவரை மிகச் சிறிய மாற்றங்கள் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. டாப் எண்ட் மாடலில் மட்டும் இருந்த டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே தற்போது அனைத்து வேரியன்ட்களுக்கும் கொண்டு வரப்படுகிறது. அடுத்ததாக மேனுவல் கியர் வேரியன்ட் கார்களுகு்கு லெதர் கியர் நாப் வழங்கப்பட்டுள்ளது.
செல்டோஸ் - Soltos
செல்டோஸ் கார் தான் இருப்பதிலேயே குறைவான அப்டேட்டை பெறுகிறது. ஒரே ஒரு அப்டேட் தான் செய்யப்படுகிறது. இந்த காரில் பின் சீட்டில் உள்ளவர்களுக்கு இதுவரை லேப் சீட் பெல்ட்தான் வழங்கப்பட்டு வருகிறது. இனி அது மாற்றப்பட்டு 3 பாயிண்ட் சீட்பெல்ட் பொருத்தப்படுகிறது. இந்த ஒரு மாற்றம் தான் இருக்கிறது. வேறு மாற்றங்கள் இல்லை.
இன்ஜின் - Engine
சோனட் காரின் இன்ஜினை பொருத்தவரை 116 பிஎஸ் பவர் கொண்ட தற்போது போது உள்ள அதே இன்ஜின் தான் இந்த காரில் பொருத்தப்படுகிறது. ஆனால் செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் காரில் உள்ள 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினிற்கு பதிலாக 160 பிஎஸ் பவர் கொண்ட 1.5 லிட்டர் டி-ஜிடிஐ இன்ஜின் பொருத்தப்படுகிறது. இதில் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்படுகிறது. டீசல் இன்ஜினில் மட்டும் 6 ஸ்பீடு ஐஎம்டி கியர் பாக்ஸ் (கிளட்ச் இல்லாத மேனுவல்) பொருத்தப்படுகிறது.
விலை - Price
கியா நிறுவனம் இந்த மாற்றத்தைச் செய்துள்ளதால் இந்த காரின் விலையும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம் புதிய விலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. தற்போது சோனட் கார் ரூ7.69 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், கேரன்ஸ் கார் ரூ10.2 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், செல்டோஸஅ கார் ரூ10.59 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும் விற்பனையாகி வருகிறது. விரைவில் சோனட் ஃபேஸ்லிஃப்ட் காரை எதிர்பார்க்கலாம் என்பது கூடுதல் தகவல்!


Click it and Unblock the Notifications








