காருக்கான மரியாதையே போச்சு... ஆக்டிவாவுக்கு சுத்தியும் கம்பி கட்டுறது போல கேரன்ஸுக்கு கம்பி கட்டிய உரிமையாளர்!

தவறி விழும்போது பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஸ்கூட்டர்களில் உலோகத்தால் ஆன பாடி குவார்டு (Body protector) பயன்படுத்தப்படும். இது மிகப் பெரிய சேதங்கள் மற்றும் சிராய்ப்புகளில் இருந்து இருசக்கர வாகனங்களை பாதுகாக்கும். இத்தகைய ஓர் பாடி குவார்டையே கியா கேரன்ஸ் கார் (Kia Carens) உரிமையாளர் தன்னுடைய காருக்கு பயன்படுத்தி இருக்கின்றார்.

இந்த கார்குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அதிக சொகுசு வசதிகளுக்கு பெயர்போன காராக கியா கேரன்ஸ் உள்ளது. சொகுசு வசதிகள் மட்டுமின்றி ஆடம்பர வசதிகளையும் அதிகம் தாங்கிய வாகனமாகவே அது இருக்கின்றது. இதனால்தான் லக்சூரி கார் விரும்பிகளின் பிரியமான எம்பிவியாக இந்த கார் காட்சியளிக்கின்றது.

Kia carens with body protector video

இத்தகைய காருக்கே திருஷ்டி பொட்டை வைப்பதைப் போல அதன் உரிமையாளர் பாடி குவார்டைச் சேர்த்திருக்கின்றார். சில ரேஸர்கள் தங்களின் கார்களில் இத்தகைய பாடி குவார்டை பயன்படுத்துவர். பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும்போது வாகனங்களில் இத்தகைய குவார்டை பயன்படுத்துவார்கள். கார் ரோலோவர் ஆகும்போது இந்த குவார்டுகள் முக்கிய பாதுகாப்பு கருவியாக செயல்படும்.

இதுமாதிரியான ஓர் குவார்டையே கியா கேரன்ஸ் கார் உரிமையாளர் தன்னுடைய வழக்கமான காருக்கு பயன்படுத்தி இருக்கின்றார். இந்த செயலுக்காக பலர் கியா கேரன்ஸ் கார் உரிமையாளரை நக்கலடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக, நெட்டிசன்களுக்கு மீம் கிரியேட் செய்ய லட்டுபோல் இது மாட்டிக்கிட்டது என்றே கூறலாம்.

அதேவேளையில், இந்த கேரன்ஸ் கார் புத்தம் புதியது என தெரிகின்றது. அதில், தற்காலிக பதிவெண்ணே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. வாகனம் பதிவு செய்வதற்கு முன்னர் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த குவார்டை அதன் உரிமையாளர் பயன்படுத்தி இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

அதேநேரத்தில் சினிமா ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களிலும் இதுமாதிரியான குவார்டுகளே பயன்படுத்தப்பட்டு இருக்கும். சுவாரஷ்யமான காட்சிகளைப் பதிவு செய்வதற்காக கேமிராக்களை தாங்கிச் செல்ல ஏதுவாக இத்தகைய குவார்டுகள் பயன்படுத்தப்படும். ஆகையால், இந்த கியா கேரன்ஸ் ஷூட்டிங்கிற்காகவும் இவ்வாறு மாடிஃபை செய்யப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆனால், இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. கியா கேரன்ஸ் ஓர் விநோதமான தோற்றம் கொண்ட எம்பிவி காராக இருக்கின்றது. இதன் தோற்றம் எஸ்யூவி-யைப் போன்றும் பிரதிபலிக்கும். எஸ்யூவி மற்றும் எம்பிவி இரு ரக கார் பிரியர்களையும் கவரும்பொருட்டு இத்தகைய தோற்றத்தை கியா கேரன்ஸுக்கு வழங்கி இருக்கின்றது.

இந்தியாவின் பெரிய குடும்பததாரர்களுக்கு ஏற்ற வாகனமாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு மற்றும் ஏழு ஆகிய இரு விதமான இருக்கைகள் தேர்வில் கேரன்ஸ் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிக சொகுசு வசதி மற்றும் இட வசதியை விரும்புவோர்களுக்கு ஏற்ற தேர்வாக ஆறு இருக்கை தேர்வு இருக்கின்றது.

இந்தியாவில் மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா ஆகியவற்றிற்கு போட்டியாகவே கியா கேரன்ஸ் விற்பனையில் இருக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 10.45 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் ரூ. 11 லட்சத்திற்கும் அதிகமான விலையை அது கொண்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விநோதமான செயல்களை செய்வதில் இந்தியர்கள் பெயர்போனவர்களாக இருக்கின்றனர். அந்தவகையில், கடந்த காலங்களில் சூரிய வெப்பத்தில் இருந்து காப்பதற்காக கார்களுக்கு மாட்டு சாணியைப் பயன்படுத்திய சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஆக்டிவா ஸ்கூட்டர்களில் பயன்படுத்துவதைப் போன்ற குவார்டு கேரன்ஸ் காருக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, May 29, 2023, 20:09 [IST]
English summary
Kia carens with body protector video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+