கியா கேரன்ஸ் காரை இனி இந்த புதிய டர்போ என்ஜின் உடன் வாங்க வேண்டியதுதான்!! புதிய விலைகள் எவ்வளவு தெரியுமா?
கியா கேரன்ஸ் எம்பிவி கார் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உள்பட சில புதிய அம்சங்களுடன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், இந்த புதிய அப்கிரேட்களினால் கேரன்ஸ் காரின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளனவா என்பதை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.
கியா கேரன்ஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 3-வரிசை கார்களுள் ஒன்று. இந்த கார் புதிய ஆர்டிஇ (RDE- Real drive emission) விதிமுறைகளுக்கு இணக்கமான என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமீப காலமாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக புதிய கேரன்ஸ் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய ஆர்டிஇ விதிமுறைகள் ஆனது 2020 ஏப்ரலில் அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்டம் ஆகும்.

இந்த புதிய ஆர்டிஇ விதிமுறைகள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்குவர உள்ளன. இதற்கு முன்பாக பல்வேறு வாகனங்கள் ஆர்டிஇ-க்கு இணக்கமான என்ஜினுக்கு அப்டேட் ஆகிவரும் நிலையில், தற்போது கேரன்ஸையும் கியா நிறுவனம் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வகையில் சமீப வாரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு வரும் கார்களும், பைக்குகளும் தங்களது வழக்கமான என்ஜின்களையே ஆர்டிஇ-க்கு இணக்கமானவைகளாக பெற்றுள்ளன.
ஆனால் கியா கேரன்ஸ் முற்றிலும் புதிய டர்போ பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. முன்பு கேரன்ஸில் வழங்கப்பட்டு வந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு மாற்றாக இந்த புதிய டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய டர்போ என்ஜின் உடன் ஐஎம்டி (iMT) கியர்பாக்ஸ் தொழிற்நுட்பமும் கேரன்ஸ் எம்பிவி காரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஐஎம்டி கியர்பாக்ஸை கேரன்ஸ் காரில் புதிய டர்போ என்ஜின் உடனும் பெற முடியும்.

அதேநேரம் புதிய டர்போ என்ஜின் வழக்கமான 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். புதிய கேரன்ஸ் டர்போ கார் மொத்தம் 9 விதமான வேரியண்ட்களில் கிடைக்கும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.18.45 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் ஐஎம்டி மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் அடங்குகின்றன. அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்னென்ன என்பதை கீழே உள்ள அட்டவணையில் விரிவாக காணலாம்.
| Kia Carens Turbo Prices | |||
| Variants | Prices for new iMT (Ex-showroom) | Prices for DCT | |
| Premium | ₹12 Lakh | ||
| Prestige | ₹13.25 Lakh | ||
| Prestige Plus | ₹14.75 Lakh | ₹15.75 Lakh | |
| Luxury | ₹16.20 Lakh | ||
| Luxury Plus 6-Seater | ₹17.50 Lakh | ₹18.40 Lakh | |
| Luxury Plus 7-Seater | ₹17.55 Lakh | ₹18.45 Lakh | |
புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் கேரன்ஸ் காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்காது. ஆனால் கேரன்ஸ் டர்போ காரை 6 இருக்கைகள் மட்டுமின்றி, 7 இருக்கைகள் உடனும் வாங்க முடியும். ஹூண்டாய் அல்கஸாரில் வழங்கப்பட்டு வந்த இந்த புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது கியா-ஹூண்டாய் கூட்டணியில் ஓர் முக்கிய என்ஜின் தேர்வாகும். இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 160 பிஎஸ் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது.

இது முன்பு பயன்பாட்டில் இருந்த 1.4 லிட்டர் டர்போ என்ஜின் வெளிப்படுத்துவதை காட்டிலும் 20 பிஎஸ் அதிகமாகும். புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி, கேரன்ஸில் வழக்கப்படும் மற்ற இரு என்ஜின் தேர்வுகளான 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உள்ளிட்டவையும் பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் டீசல் என்ஜின் முன்பு வழங்கியதை காட்டிலும் சற்று அதிகமாக 116 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த டீசல் என்ஜின் உடன் கியர்பாக்ஸ் தேர்வுகளாக ஐஎம்டி மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளன. 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினை பொறுத்தவரையில், இது ஆர்டிஇ-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டாலும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் கேரன்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.45 லட்சத்தில் இருந்து ரூ.11.65 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








