Kia Carnival Discontinued, இப்படிபட்ட சூப்பர் காரை நிறுத்திட்டாங்களா? இதுக்கு பதிலா என்ன வரப்போகுது தெரியுமா?

கியா நிறுவனம் தனது கார்னிவல் என்ற எம்பிவி காரை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த பிஎஸ்6 2ம் கட்ட கட்டுபாடுகளுக்கு பிறகு இந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணாலாம்.

கியா நிறுவனம் இந்தியாவிற்குள் தன் காலடி தடத்தை எடுத்து வைத்த பின்பு களம் இறக்கிய 2வது கார் கியா கார்னிவல், இந்த கார் எம்பிவி ரக காராகும். சொகுசை விரும்புபவர்களுக்கும், குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு ஏற்ற காராக இந்த கியா கார்னிவல் கார் இருந்தது.

Kia Carnival Discontinued

இந்நிலையில் கியா நிறுவனம் தனது கார்னிவல் காரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கார் பிரிமியம் ரக கார் என்பதால் எண்ணிக்கையில் மிக சொற்பமாகவே விற்பனையாகும் ஒரு காராக இருக்கும். இந்நிலையில் கடந்த ஏப்1ம் தேதி இந்தியா முழுவதும் பிஎஸ்6 2ம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.

இந்த கட்டுபாடுகளுக்கு ஏற்ற மாதிரி இந்த காரின் இன்ஜின் மேம்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த கார் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை கியா நிறுவனம் வெளியிடவில்லை.

Kia Carnival Discontinued

ஆனால் இந்த காருக்கு பதிலாக கியா நிறுவனம் கார்னிவெல் அப்டேடட் வெர்ஷன் காரை விரைவில் அறிமுகப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் பிஎஸ் 6 2ம் கட்ட கட்டுபாடுகளுடன் தயாராகியுள்ளது.

கியா நிறுவனம் இந்த பிஎஸ் 6 2ம் கட்ட கட்டுபாடுகளுடன் தனது செல்டோஸ், சோனட், மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களின் இன்ஜினை கடந்த ஜனவரி மாதமே மாற்றியமைத்தது. கியா சர்வதேச அரங்கில் தனது 4வது தலைமுறை கார்னிவல் காரை வரும் 2024ம் ஆண்டு ஜனவரி அல்லது இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கியா நிறுவனம் கார்னிவல் ஏற்கனவே எண்ணிக்கையில் குறைவாக விற்பனையாகும், கார் என்பதால் இதன் இன்ஜினை மேம்படுத்துவதில் பணத்தை செலவு செய்யலாம் நேரடியாக அப்டேட்ட செய்யப்பட்ட காரையே களம் இறக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

கியா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட கார்னிவல் காரை இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவின் போது கேஏ4 எம்பிவி என்ற பெயரில் கான்செப்ட் காராக அறிமுகப்படுத்தியது. இதற்கு இந்தியாவில் சிறப்பான வரவேற்பு இருந்தது. தற்போது தென்கொரியாவில் இந்த கார் டெஸ்டிங்கில் உள்ளது.

இந்த புதிய தலைமுறை கார்னிவல் கார் அப்டேட் செய்யப்பட்ட ஹைபிரிட் இன்ஜின் உடன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இதன் டிசைனில் முன்பக்க ஹெட்லைட் நீளவாக்கிலும், எல்இடி டேடைம் ரன்னிங் லைட் புதிய லேஅவுட்டிலும், பானட் ரீடிசைன் செய்யப்பட்டும் காணப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் கியா இவி9 எஸ்யூவி காரின் ஹெட்லைட் டிசைனை போலவே உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய தலைமுறை காரில் தற்போதைய தலைமுறை கார்னிவல் காரின் அதே அளவு தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கமும், பின்பக்கமும் டிசைனில் வேண்டுமானால் மாற்றம் வரலாம். இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் மோட்டாருடன் இணைந்து ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் வேலை செய்யும் திறன் கொண்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா கார்னிவல் கார் குறைந்த எண்ணிக்கையில் விற்பனையானாலும் அந்த செக்மெண்டில் மக்கள் மனத்தை கொள்ளயடித்த கார், இந்த கார் ரோட்டில் போனாலே பலரை திரும்பி பார்க்க வைக்கும். இந்த கார் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாவது வருத்தமான செய்தி தான். இருந்தாலும் இதை அப்டேட் வெர்ஷனிற்காக நிச்சயம் காத்திருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 20, 2023, 18:30 [IST]
English summary
Kia carnival discontinued in india awaits for new generation launch
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+