'டீ' கடைல வட, பஜ்ஜி சுடுவதுபோல இவங்க கார்கள தயாரிச்சுட்டு இருக்காங்க! இந்த நிறுவனத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி வெளிநாட்டு கார் உற்பத்தி நிறுவனங்களில் கியா-வும் ஒன்று. இதுவே ஹூண்டாய் நிறுவனத்தின் தாய் நிறுவனமும் ஆகும். இந்த பிராண்டின்கீழ் தற்போது நான்கு கார் மாடல்கள் மட்டுமே இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளன. செல்டோஸ், சொனெட், கேரன்ஸ் மற்றும் இவி6 ஆகியவையே அவை ஆகும்.

மிக சமீபத்திலேயே இந்த நிறுவனம் சொகுசு எம்பிவி கார் மாடலான கார்னிவலை விற்பனையில் இருந்து அகற்றியது. நிறுவனத்தின் இவி6 என்பது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த ஒற்றை எலெக்ட்ரிக் காரை மட்டுமே இந்திய சந்தையில் கியா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Kia car production hits one million in india

அதுவும், சொகுசு வசதிகள் நிறைந்த பிரீமியம் கார் பிரிவில் அது விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கியா நிறுவனம் டீ கடையில் வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை சுடுவது போல அதன் கார்களை தயாரித்துத் தள்ளிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனம் இதுவரை 1 மில்லியன் கார்களை இந்தியாவில் தயாரித்து இருக்கின்றது. குறிப்பாக, செல்டோஸ் கார் உற்பத்தியில் நிறுவனம் வரலாற்று சாதனையையே கியா படைத்திருக்கின்றது. இந்த காரின் உற்பத்தி பணிகளை இந்தியாவில் தொடங்கி இதுவரை 5,32,450 யூனிட்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வெற்றிகரமான மைல்கல்லை வெகு சமீபத்திலேயே கியா செல்டோஸ் எட்டி இருக்கின்றது.

இந்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக கியாவும் உறுதி செய்திருக்கின்றது. இந்த கார் மாடலை அடுத்து சொனெட் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன. 3,32,450 வரை தயாரிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக கேரன்ஸ் 1,20,516 யூனிட்டுகளும், கார்னிவல் 14,584 யூனிட்டுகளும் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் அமைந்திருக்கின்றது. இங்கு வைத்தே கியா தனது அனைத்து கார் மாடல்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இவி6 எலெக்ட்ரிக் காரை தவிர. இந்த வாகனம் நேரடியாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகின்றது. இதனால் இதன் விலை சற்று அதிகமாக உள்ளது.

மேலும், இப்போது வரை ஒரு சில நூறு யூனிட்டுகள் மட்டுமே அது விற்பனையாகி இருக்கின்றது. ஆனால், செல்டோஸ் எஸ்யூவி மாதம் ஒன்றிற்கே பல ஆயிரம் யூனிட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கியா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்து அது விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கார் மாடலே செல்டோஸ் ஆகும்.

இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரே இந்தியாவில் கியாவிற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த கார் மாடலாகும். கியா நிறுவனம் செல்டோஸ் காரை இந்தியாவில் முதன் முதலில் 2019 ஆகஸ்டுலேயே விற்பனைக்குக் களமிறக்கியது. தற்போது விற்பனைக்கு வந்து நான்கு ஆண்டுகளைத் தொட்டுவிட்ட நிலையில் இதற்குள்ளாகவே 5.32 லட்சம் யூனிட் தயாரிப்பை செல்டோஸ் எட்டி இருக்கின்றது.

கியா நிறுவனம் தற்போது செல்டோஸுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் விற்பனை வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியாக புதிய அப்டேட் செய்யப்பட்ட செல்டோஸை விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் கியா களமிறங்கி இருக்கின்றது. இந்த காருக்கான ப்ரீ புக்கிங் பணிகள்கூட இந்தியாவில் தொடங்கிவிட்டன. ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைவான முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

புதிய கியா செல்டோஸ் வேற லெவல் அம்சங்கள் கொண்ட வாகனமாக இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. குறிப்பாக, அடாஸ் அம்சத்தை செல்டோஸின் உயர்நிலை தேர்வில் கியா வழங்க இருக்கின்றது. லெவல் 2 வகை அடாஸ் அம்சமே அப்டேட்டட் செல்டோஸில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் வாயிலாக 17 விதமான பாதுகாப்பு வசதிகளை புதிய செல்டோஸ் கார் உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். அவசர காலத்தில் தானாக பிரேக் பிடித்தல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் என எக்கசக்க வசதிகளை இதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.

இதுதவிர, புதிய டிசைன், 32 விதமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற பிரீமியம் அம்சங்கள் என பல புதிய செல்டோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் வரும் நாட்களில் செல்டோஸின் விற்பனையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் இதுவரை ஒரு மில்லியன் கார்களை தயாரித்து இருப்பது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த சாதனை அடுத்தடுத்தும் வரும் காலங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் இந்த வெற்றிற்கு செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகியவையே காரணம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, July 14, 2023, 17:16 [IST]
English summary
Kia celebrates historical milestone of dispatching one million vehicles in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+