கியா நிறுவனத்தின் புதிய கார் பெயர் இது தான்! எந்த காருக்கு இந்த பெயர் வைக்கப்போறாங்க தெரியுமா?
கியா நிறுவனம் கிளாவிஸ் என்ற புதிய பெயரை டிரேட் மார்க் செய்துள்ளது . இந்த பெயரில் கியா நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் காரான இவி9 என்ற 7 சீட்டர் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தப் போகிறதா அல்லது இந்த பெயரில் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் புதிய காரை அறிமுகப்படுத்தப் போகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கியா நிறுவனம் சமீப காலமாக தனது எஸ்யூவி ரக கார்களை அதிகம் அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் இந்நிறுவனம் தனது செல்டோஸ் காரை ஃபேஸ்ஃலிப்ட் செய்து அறிமுகப்படுத்தியது. கடந்த வாரம் தனது புதிய சோனட் ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் வரும் ஜனவரி மாதம் தான் விற்பனைக்கு வர உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான கியா செல்டோஸ் காரில் வெளிப்புறம் உள்ள அப்டேட் மற்றும் புதிய அம்சங்கள் ஆகிய இந்த செக்மெண்டிலேயே இந்த காரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது. இதனால் இந்த செக்மெண்டில் கார் வாங்கும் பலர் இந்த காரை தேர்வு செய்ய விரும்பினார்கள். ஜனவரி மாதம் விற்பனைக்கு வர உள்ளதால் இந்த காருக்கும் மவுசு அதிகமாக இருக்கிறது.
கியா நிறுவனம் தற்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் ஐந்தாவது மிகப்பெரிய நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் செல்டோஸ், சோனட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் இந்நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கியா நிறுவனம் தனது கார்னிவெல் காரை அப்டேட் செய்து நான்காவது தலைமுறைக்காக வெளியிட முடிவு செய்துள்ளது.

இதற்காக கடந்த ஜனவரி மாதம் டில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் தனது இவி9 என்ற ஏழு சீட்டர் எஸ்யூவி காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த கார் இ-ஜிஎம்பி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராகும். இதே பிளாட்பார்மில் தான் அயானிக் 5 மற்றும் அயானிக் 6 ஆகிய கார்களும் உருவாக்கப்பட்டுள்ளது நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த காரும் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா நிறுவனம் தனது இவி9 கார் இந்தியாவிற்கு வருவது உறுதி என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கியா கிளாவிஸ் என்ற பெயரில் புதிய பெயர் ஒன்றை டிரேட் மார்க்கிற்காக பதிவு செய்துள்ளது. இந்த பெயரை தனது புதிய காருக்காக பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பெயர் கியா நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆர்வி காராக இருக்க வாய்ப்புள்ளது.

கியா நிறுவனம் தனது இவி9 காருக்கு சூட்டப்பட்டு இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான எந்த விதமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. பெயரை பதிவு செய்யும்போது அது என்ன விதமான கார் என பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் இந்த தகவல் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை.
கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் குடும்பத்தினர் பயணிக்கும் அளவிற்கு அதிக பிராக்டிக்கல் அம்சங்கள் கொண்ட காராக இருப்பதால் வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகின்றனர். போட்டியாக இந்த இவி9 கார் கிளாவிஸ் என்ற பெயரில் வெளியானால் மக்கள் மனதை ஈர்க்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கியா நிறுவனம் மற்றொரு ஐடியாவிலும் இந்த பெயரை புக் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சமீப காலமாக மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட் மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. கியா நிறுவனத்திடம் இந்த செக்மெண்டில் கார்களே இல்லை இதனால் கியா நிறுவனம் குறைவான வகையில் ஹுண்டாய் எக்ஸ்டரை போலவே கியா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் ஒரு காரை களம் இறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காருக்காகவும் இந்த பெயரை டிரேட் மார்க் வாங்கியிருக்கலாம் என்ற பேச்சும் நிலவி வருகிறது.
கியா நிறுவனம் இந்த பெயரை அதன் ஃபிளாக்ஷிப் காருக்கு வைக்கப் போகிறதா? அல்லது புதிய மைக்ரோ எஸ்யூவி காரான குறைந்த விலை காருக்கு வைக்கப் போகிறதா? என்ற விபரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஃபிளாக்ஷிப் காரை விட மைக்ரோ எஸ்யூவி செக்மெண்ட் காருக்கு தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் என நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் ஐந்தாவது நிறுவனமாக இருக்கும் நிலையில் இது மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் காரை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையிலான கார்கள் விற்பனையாக வாய்ப்புள்ளது. இதனால் கியா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் அதிகமாகி நான்கு அல்லது மூன்றாவது இடத்தை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற சூழ்நிலை உருவாகும்.


Click it and Unblock the Notifications









