மைலேஜ் தருவதில் மாருதிக்கே டஃப் கொடுக்கும் காரை களமிறக்கும் கியா! தரமான சம்பவத்துக்கு தயாராகும் இந்தியா!
அதிகம் மைலேஜ் தருவதில் மாருதி சுஸுகி கார்கள் பெயர்போனவையாக இருக்கின்றன. அதிலும், நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகள் சில ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிமீ - 24 கிமீ என மைலேஜை வாரி வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. இத்தகைய சூப்பரான மைலேஜ் திறனுக்கு அந்த கார்களில் வழங்கப்பட்டு இருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பமே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இத்தகைய சூப்பரான மைலேஜ் தரும் ஹைபிரிட் சிஸ்டத்தையே தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான கியா, அதன் தயாரிப்புகளிலும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட, அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர், தங்கள் நிறுவனம் விரைவில் டீசல் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்த இருப்பதாகவும், அதன் இடத்தை நிரப்பும் விதமாக ஹைபிரிட் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே கியாவின் இந்தியாவிற்கான முதல் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார் பற்றிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றது. நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் கிளாவிஸ் எனும் பெயருக்கான டிரேட்மார்க் பதிவை செய்தது. இந்த கார் மாடலையே கியா தனது முதல் ஹைபிரிட் வசதிக் கொண்ட முதல் கார் மாடலாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், இந்தியாவிற்கான எலெக்ட்ரிக் கார் மாடலே கிளாவிஸ் என்கிற ஒருபுறம் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், கிளாவிஸ் என்ன மாதிரியான மோட்டார் அம்சத்தில் விற்பனைக்கு வரும் என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக மாறி இருக்கின்றது. இருப்பினும், நிறுவனம் டீசல் கார்களுக்கு ஹைபிரிட் கார்களை விரைவில் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆகையால், இந்த கிளாவிஸ் ஹைபிரிட் டெக்னாலஜியுடன் விற்பனைக்கு வரும் என வலுவாக நம்பப்படுகின்றது. இருப்பினும், நிறுவனத்திடம் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. கியா நிறுவனம் இந்தியாவில் வேண்டுமானால் ஹைபிரிட் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வராமல் இருக்கலாம். ஆனால், உலக சந்தையில் அதிக எண்ணிக்கையில் ஹைபிரிட் வாகனங்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
கே8 செடான், நிரோ கிராஸோவர், கார்னிவல் எம்பிவி, சொரென்டோ எஸ்யூவி மற்றும் ஸ்போர்டேஜ் எஸ்யூவி ஆகிய கார் மாடல்களிலேயே நிறுவனம் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதை (உலக சந்தையை)ப் போலவே இந்தியாவையும் கியா விரைவில் ஹைபிரிட் கார்களால் அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் டீசல் கார்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப் போனால் ஒட்டுமொத்த விற்பனையில் 40 சதவீத மார்க்கெட்டை டீசல் கார்களே கொண்டிருக்கின்றன. இத்தகைய வலுவான மார்க்கெட்டையே கைவிட இருப்பதாக கியா நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டு இருக்கின்றது.
இந்த முடிவால் பெரும் இழப்பை நிறுவனம் சந்திக்கும் என்றாலும், மாசற்ற சுற்றுச் சூழலை உருவாக்குவதில் இதன் பங்களிப்பு மிகப் பெரிய அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஒரு காரணத்திற்காக முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் சில டீசல் கார் உற்பத்தியை முழுமையாக கை விட்டிருக்கின்றன.
அந்தவகையில், ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனம் முன்னோடி நிறுவனமாக முற்றிலுமாக டீசல் வாKன உற்பத்தியை கைவிட்டு இருக்கின்றது. அது தற்போது பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனத்தையும் எதிர்காலத்தில் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியை மாருதி சுஸுகி முன்னெடுக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனங்கள் மட்டுமில்லைங்க இன்னும் பல நிறுவனங்கள் டீசல் வாகன உற்பத்தியை கைவிட இருக்கின்றது. குறிப்பாக ஒரு சில நிறுவனங்கள் முற்றிலுமாக பெட்ரோல், டீசல் என அனைத்து எரிபொருளில் இயங்கும் வாகன உற்பத்தியையும் கைவிட உள்ளன. மேலும், முழுக்க முழுக்க மின்சார கார்கள் உற்பத்தியில் அவை களமிறங்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








