கியா களமிறக்க போகும் புதிய காரின் விலை இவ்ளோதானா! தரமட்டத்துக்கு எறங்கீட்டாங்க! கலக்கத்தில் டாடா, ஹூண்டாய்!
இந்திய சந்தையில் அளவில் சிறிய எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. டாடா பன்ச் (Tata Punch) மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு இதற்கு ஒரு உதாரணம் ஆகும்.
எனவே கியா நிறுவனமும், இந்த செக்மெண்ட்டில், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய 2 கார்களுக்கும் போட்டியாக புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் பெயர் அனேகமாக கியா க்ளாவிஸ் (Kia Clavis) என்பதாக இருக்கலாம்.

ஏனெனில் கியா நிறுவனம் தற்போது க்ளாவிஸ் என்ற பெயரை பதிவு செய்துள்ளது. இந்த காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் மற்றும் 172 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இதன் ரேஞ்ச் எவ்வளவு இருக்கும்? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை.

எனினும் 350-400 கிலோ மீட்டர் என்ற அளவில் இதன் ரேஞ்ச் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கியா க்ளாவிஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் ஆரம்ப விலை 6 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். அதே நேரத்தில் இந்த காரின் எலெக்ட்ரிக் வேரியண்ட்களின் ஆரம்ப விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் தற்போது விற்பனைக்கு தயாராகி வருகின்றன. எனவேதான் கியா நிறுவனமும், க்ளாவிஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகிய 2 கார்களின் விற்பனையும் சிறப்பாக இருந்து வருகிறது. இதை தொடர்ந்து இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு வரவுள்ள க்ளாவிஸ் கார், கியா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நாங்கள் கருதுகிறோம்.
இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதே இதற்கு காரணம் ஆகும். கியா க்ளாவிஸ் காரானது, வரும் 2024ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது வரும் 2025ம் ஆண்டின் தொடக்கத்திலோ இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








