விரைவில் பிரியா விடை பெறும் டீசல் கார்கள்... இதனால ஒட்டுமொத்த நாடும் சோகத்துல மூழ்க போகுது!
கியா நிறுவனத்தின் குறிப்பிட்ட சில டீசல் கார்கள் இந்தியாவில் இருந்து அகற்றப்பட இருக்கின்றன. அதாவது, விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளன. நிறுவனத்தின் இந்த திடீர் முடிவிற்கான காரணம் மற்றும் விற்பனையில் வெளியேற்றப்பட இருக்கும் கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்திய சந்தையை விட்டு குறிப்பிட்ட சில கார் மாடல்கள் வெகு விரைவில் வெளியேற இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வெகு விரைவில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட இருக்கும் புதிய மாசு உமிழ்வு விதி, 'பிஎஸ் 6 கட்டம் இரண்டே' இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. புதிய விதியானது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது.

புதிய வாகனங்கள் அனைத்திலும் நிகழ்நேர மாசு உமிழ்வை கண்டறியும் கருவி இடம் பெற வேண்டும் என்பதை இந்த விதி கட்டாயமாக்குகின்றது. இதை முன் வைத்தே இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் சில முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் பிரபல கார் மாடல்களில் இருந்து குறிப்பிட்ட சில தேர்வுகளை மட்டும் விற்பனையில் இருந்து அகற்ற திட்டம் போட்டு இருக்கின்றன.
இந்த மாதிரியான ஓர் நடவடிக்கையையே தன்னுடைய பிரபல கார் மாடல்களில் கியா நிறுவனம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் அதன் செல்டோஸ், சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார் மாடல்கள் இருந்தே குறிப்பிட்ட சில தேர்வுகளை அகற்ற இருக்கின்றது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் எஞ்ஜின் தேர்வுகளையே நிறுவனம் விற்பனனையில் இருந்து அகற்ற இருக்கின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இன்னும் ஒரு சில தினங்களில் இதுபற்றிய தகவலை நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் ஐஎம்டி போன்ற சூப்பரான மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை சொனெட், செல்டோஸ் மற்றும் கேரன்ஸ் ஆகியவற்றில் வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவையே நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கையால் நாட்டை விட்டே வெளியேற இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி செல்டோஸ் கார் மாடலில் 6 ஸ்பீடு ஐஎம்டி, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதேபோல், சொனெட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார் மாடல்களிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் டீசல் எஞ்ஜின் தேர்வுடன் விற்பனைக்குக் கிடைக்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன்களே சந்தையை விட்டு வெளியேற இருக்கின்றன. புதிய விதியின் காரணமாக புது வாகனங்களின் கணிசமாக உயரமாக இருக்கின்றது. ஏற்கனவே மாருதி சுஸுகி அதன் குறிப்பிட்ட சில தயாரிப்புகளின் விலையை உயர்த்தத் தொடங்கிவிட்டது.
சமீபத்தில் அதன் இக்னிஸ் காரின் விலையைக் கணிசமாக உயர்த்தி நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதற்கு புதிய விதி மட்டுமே காரணம் அல்ல. சில பாதுகாப்பு அம்சங்களையும் புதிதாக இக்னிஸ் காரில் மாருதி சுஸுகி சேர்த்தது. இதன் விளைவாக பிரீமியம் தர இக்னிஸ் காரின் விலை தற்போது ரூ. 27 ஆயிரம் வரை உயர்ந்திருக்கின்றது.

இந்த காரைப் போலவே இன்னும் சில கார் மாடல்களின் விலை உயர்த்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது. இந்த விலை உயர்வு சில குறிப்பிட்ட வேரியண்டுகளுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்காது என்கிற காரணத்தினாலேயே, அவற்றை புதிய விதிக்கு ஏற்ப அப்டேட் செய்யாமல் சந்தையை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் வாகன உற்பத்தியாளர்கள் களமிறங்கி இருக்கின்றனர்.
கியா நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டம் போட்டு இருக்கின்றது. ஏற்கனவே கியா இவி6 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து இன்னும் சில கார் மாடல்களையும் அது விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









