காருல 4லி ஃப்ரிட்ஜ், பெட்ரூமா! வீடு இல்லாதவங்களுக்கு வீடாகபோகுது! கியா நிறுவனத்தின் தயாரிப்பா இது!

"குட்டி ஃப்ரிட்ஜ் ஓகே, எப்படிங்க பெட்ரூமை இந்த காருல கொண்டு வந்தாங்க".. அப்படினுதானே சந்தேகப்படுறீங்க. இதைபோல இன்னும் பல ஆச்சரியங்களை இந்த கார் தாங்கி இருக்கின்றது. அவைகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க. குறிப்பாக, இன்னும் வேறு என்ன சிறப்பு வசதிகளை எல்லாம் இந்த கார் தாங்கி இருக்கின்றது என்பது குறித்தும் பார்க்கலாம், வாங்க.

தென் கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனம் கியா. இந்த பிராண்டு ஏற்கனவே இந்தியாவில் கால் தடம் பதித்துவிட்டது. மேலும், இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாகவும் அது தற்போது மாறி இருக்கின்றது. இந்த பிராண்டே உலக வாகன ஆர்வலர்களை வியக்க வைக்கின்ற வகையில் ஓர் காரை வெளியீடு செய்திருக்கின்றது.

Kia ev 5 ecar

அது சமீபத்தில் உருவாக்கிய இவி5 எனும் கார் மாடலையே வெளியீடு செய்திருக்கின்றது. தற்போது இந்த கார் மாடல் கான்செப்ட்-ஆக மட்டுமே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. வெகு விரைவில் அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரில் சிறிய பெட்ரூம் மற்றும் குட்டி குளிர்சாதன பெட்டியை கியா நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

நீண்ட தூர டிராவலை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு இந்த அம்சங்களை அது வழங்கி இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல அம்சங்களை இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது. 12.3 அங்குல திரைகள் இரண்டு இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும்.

Kia ev5

இதுதவிர, 5 அங்குல கிளைமேட் கன்ட்ரோல் திரை ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கார் ரேஞ்ஜ் வழங்குவதிலும் மிக சிறந்த காராகவே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்போது இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.

64 kWh மற்றும் 88 kWh ஆகிய பேட்டரி பேக் தேர்வுகளிலேயே கியா இவி5 விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் விற்பனைக்கான வருகை எப்போது அமையும் என்கிற துள்ளியமான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில், இவை முதன் முதலில் சீனா மற்றும் கொரிய நாடுகளில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது.

Kia ev5 rear

மேலும், இதன் உற்பத்தி வருகின்ற 2025ம் ஆண்டில் தொடங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக தேவையைப் பொருத்து இதற்கு முன்னதாகவும் இதன் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சீனாவிற்கான கியா இவி5 எலெக்ட்ரிக் காரின் முன் பக்கத்தில் பென்ச் வகை இருக்கைகள் வழங்கப்படும் என்பதும் உறுதியாகி இருக்கின்றது.

கியா இவி எலெக்ட்ரிக் காரின் 64 kWh பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 330 மைல் (530 கிமீ தூரம்) ரேஞ்ஜையும், 88 kWh பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 720 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும். இந்த அளவு சூப்பரான ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காராகவே கியா இவி5 இந்த உலகைக் களம் காண இருக்கின்றது.

Kia ev5 rear design

இவற்றின் இந்திய வருகை அமையுமா என்பது இப்போதைக்குக் கேள்விக் குறியாக இருக்கின்றது. அதேவேளையில், எதிர்காலத்தில் கட்டாயம் இதன் வருகையை இந்தியாவில் எதிர்பார்க்கலாம் என்கிற நம்பிக்கையும் நம் மத்தியில் எழும்பி இருக்கின்றது. இந்தியாவில் மின்சார கார்களுக்கு இப்போதைக்கு மிக சிறப்பான டிமாண்ட் நிலவுகின்றது. இதன் இவி6-க்குகூட நாட்டின் செல்வந்தர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

வரும் நாட்களில் இது அதிகரிக்குமே தவிர, குறையாது என ஆட்டோத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். கியா நிறுவனம் இந்த கார்களை மட்டுமில்லைங்க இன்னும் சில கான்செப்ட் கார் மாடல்களையும் வெளியீடு செய்திருக்கின்றது. அனைத்தையும், '2023 கியா இவி டே' என்கிற நிகழ்ச்சியின்கீழே அது வெளியீடு செய்திருக்கின்றது. இவி3, இவி9 மற்றும் இவி4 ஆகிய கார் மாடல்களையே அது காட்சிப்படத்தி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் காரில் ஃப்ரிட்ஜ் மற்றும் பெட்ரூம் வசதி வழங்கப்பட்டு இருப்பது மின்சார கார் பிரியர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. நாளடைவில், வாஷிங் மெஷின், மிக்ஸி கிரைண்டர் கொண்ட கார்கள்கூட இந்த உலகில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 13, 2023, 16:21 [IST]
English summary
Kia ev 5 e car gets 4 liter fridge and small bed feature
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X