சொகுசு கப்பலே இந்த காரிடம் தோத்திடும்! புதுகார் வாங்குற ஐடியா இருந்தா அது ஒதுக்கிட்டு 15ம் தேதி வர காத்திருங்க

நடப்பாண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதத்தில்) இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ 2023 நடைபெற்றது. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் பல கலந்துக் கொண்டு, தங்களின் அப்டேட் செய்யப்பட்ட மற்றும் எதிர்கால தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தின. அந்தவகையில், தென்கொரியாவைச் சேர்ந்த கியா நிறுவனம் அதன் வருங்கால கார் மாடல்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்தியது.

நிறுவனம் தனது கன்செப்ட் (முன் மாதிரி) மாடல்கள் சிலவற்றையும் இந்த ஆட்டோ ஷோ வாயிலாக காட்சிப்படுத்தியது. அவ்வாறு நிறுவனம் காட்சிப்படுத்தியதில் கியா இவி9 மாடலும் ஒன்று ஆகும். இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த காரை சொகுசு கப்பலுக்கு இணையான வசதிக் கொண்டதாக நிறுவனம் வடிவைத்து இருக்கின்றது.

9

மேலும், மிகப் பெரிய உருவத்தைக் கொண்ட தயாரிப்பாகவும் இதனை கியா வடிவமைத்து இருக்கின்றது. 4,929 மிமீ நீளத்திலும், 2,055 மிமீ அகலத்திலும், 1,790 மிமீ உயரத்திலும் இந்த காரை கியா உருவாக்கி இருக்கின்றது. வீல் பேஸின் அளவு 3,100 மிமீ ஆகும். இத்தகைய பிரமாண்ட அளவுகளின் காரணத்தினாலேயே இந்த காரை கப்பல்போல் கியாவால் வடிவமைக்க முடிந்திருக்கின்றது.

இந்த காரையே வெகு விரைவில் வெளியீடு செய்ய நிறுவனம் திட்டம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவை மையமாகக் கொண்டு இந்த வெளியீட்டு நிகழ்வை அரங்கேற்றும் பிளானையும் கியா போட்டிருப்பதாக கூறப்படுகின்றது. வரும் மார்ச் 15 ஆம் தேதி அன்றே எலெக்ட்ரிக் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது.

9

இந்த தகவலை கியா நிறுவனம் டீசர் படத்தின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதைத்தொடர்ந்து காரை உற்பத்தி செய்யவும் நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. இந்த பணிகள் அடுத்த சில மாதங்களிலேயே தொடங்கப்பட உள்ளன. ஆகையால், கியா இவி9 2024 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் விற்பனைக்கான அறிமுகத்தை உலக சந்தையில் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது விற்பனையில் இருக்கும் பிற கியா கார் மாடல்களைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான, நவீன மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட காராக இதனை கியா வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக, காரின் கவர்ச்சிக்காக வெளிப்புறத்தில் பன்படுத்தப்பட்டிருக்கும் அணிகலன்கள் கண்களைக் கவரக் கூடியதாக உள்ளன. 'எல்' வடிவ டிஆர்எல்கள், பிக்ஸல் ரக எல்இடி லைட்டுகளே மனம் கவரும் அம்சங்களாக உள்ளன.

9

கியா நிறுவனம் இந்த காரை பெட்டி போன்ற அமைப்பில் உருவாக்கி இருக்கின்றது. இந்த கார் நவீன யுகத்திற்கு ஏற்ற வாகனம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஃப்ளஷ் ரக டூர் ஹேண்டில்கள் அனைத்து கதவுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கை பிடிகள் காரிலம் இடம் பெற்றிருப்பதே தெரியாது. இந்த லுக்கிற்காகவே ஃப்ளஷ் டைப் ஹேண்டில்கள் இவி9-ல் கொடுக்கப்பட்டு உள்ளன.

இ-ஜிஎம்பி எனும் உலக தரம் வாய்ந்த பிளாட்பாரத்தில் வைத்தே இவி9 வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தியே கியாவின் மற்றும் ஒரு அங்கமான ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 மற்றும் ஐயோனிக் 6 உள்ளிட்ட கார் மாடல்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, கியா இவி6 எலெக்ட்ரிக் காரும் இந்த கட்டுமான தளத்தில் வைத்தே வடிவமைக்கப்படுகின்றது.

9

இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி கியா இவி9 மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் தயாரிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, ஓர் முழு சார்ஜில் 540க்கும் அதிகமான கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரி பேக்கே இந்த காரில் இடம் பெற இருப்பதும் தெரிய வந்து உள்ளது.

மேலும், பன்முக பேட்டரி பேக் தேர்விலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதுமட்டும் இல்லைங்க பன்முக திறன்கள் கொண்ட மோட்டார் தேர்விலும் இந்த மின்சார எஸ்யூவி கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. அந்தவகையில், ஒன்று 200 எச்பி திறனிலும், மற்றொன்று 400 எச்பி திறனிலும் கிடைக்க இருக்கின்றது.

9

கூடுதல் சிறப்பாக இந்த காரின் இருக்கைகளில் மிருகங்களின் தோலிற்கு பதிலாக, சைவ ரக லெதர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முழுக்க முழுக்க பசுமையான ரக வாகனம் இது என்பதை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக இவ்வாறு பல்வேறு விஷயங்களில் அதிக கவனத்துடன் கியா செயல்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 2, 2023, 14:19 [IST]
English summary
Kia ev 9 electric suv teased ahead of march 15 debut
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X