கியா மட்டும் மனசு வச்சா நம்ம நாட்டுக்கு டெஸ்லாவே தேவைப்படாது! அவ்ளோ சூப்பரான காரைதான் சீனால களமிறக்கியிருக்கு!
முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), அதன் இவி5 (e5) எலெக்ட்ரிக் காரை சீனாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குவாங்ஷோ சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி வாயிலாக வெளியீடு செய்தது. இந்த நிகழ்ச்சி வாயிலாகவே இந்த எலெக்ட்ரிக் காரை அது விற்பனைக்கும் அறிவித்தது.
இந்த நிலையிலேயே, தற்போது அந்த எலெக்ட்ரிக் காரின் விலையை அந்நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. 1,49,800 யுவான்களுக்கே இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, முதல் நாடாக இந்த காரை கியா நிறுவனம் சீனாவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் இந்திய மதிப்பு ரூ. 17.30 லட்சம் ஆகும்.

இந்த அளவு குறைவான விலையிலேயே மிக பிரமாண்ட தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் காரை கியா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. உலக நாடுகளிலேயே சீனாவில்தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சூப்பரான டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
இதன் சீன சந்தையில் கியா அதன் இவி5 எலெக்ட்ரிக் காரை முதலில் விற்பனைக்குக் களமிறக்க காரணமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளிலும் இந்த கார் விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனம் இந்த மின்சார காரை இ-ஜிஎம்பி பிளாட்பாரத்தில் வைத்தே தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த பிளாட்பாரம் பிரத்யேகமாக மின்சார வாகன உற்பத்திக்கு என தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தளத்திலேயே சில ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் மாடல்களிலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சீனாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கும் இவி5 எளெக்ட்ரிக் காரில் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
64.2 kWh மற்றும் 88 kWh ஆகிய இரு விதமான பேட்டரி பேக் தேர்வுகளே இந்த காரில் வழங்கப்படுகின்றது. இதில் முதல் பேட்டரி பேக்கானது ஓர் முழு சார்ஜில் 530 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 720 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

பேட்டரி பேக்கில் மட்டும்தான் இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மோட்டாரை பொருத்தவரை ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. 160-kW மோட்டார் தேர்வு மட்டுமே இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. இந்த காரில் ஹீட் சிஸ்டத்தைக் கண்டறிந்து, தீ விபத்தைத் தவிர்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், இந்த காரில் தீ விபத்து ஆபத்து என்பது தவிர்க்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகின்றது. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் சிறிய பெட்ரூம் மற்றும் குட்டி குளிர்சாதன பெட்டி போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர இன்னும் பல அம்சங்களை இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது. 12.3 அங்குல திரைகள் இரண்டு இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும் செயல்படும். இதுபோதாதென்று, 5 அங்குல கிளைமேட் கன்ட்ரோல் திரை ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. ஆகையால், அனைத்திலும் இந்த எலெக்ட்ரிக் கார் மிக சிறந்ததாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு மிகப் பெரிய அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக டாடா நெக்ஸான் இருக்கின்றது. இந்த காரை போலவே அதிக லக்சூரி அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் காருக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே கியா அதன் சூப்பரான இவி5 எலெக்ட்ரிக் காரை இந்த உலகில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதற்கும் நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









