கியாவின் இந்த தயாரிப்பு முன்னாடி விண்வெளி கப்பலே தோத்திடும்! எல்லாரும் இது பின்னாடி சுத்தி சுத்தி வர போறாங்க!

வெளியீட்டிற்கு ஒரு சில மணி நேரங்களே இருந்த நிலையில், கியா நிறுவனத்தின் இவி9 (Kia EV9) எலெக்ட்ரிக் காரின் படங்கள் இணையத்தின் வாயிலாக கசிந்தன. இந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக கியா நிறுவனம் அக்காரை உலகளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த சூப்பரான எலெக்ட்ரிக் கார் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2023 ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்றது. இந்த உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் பன்னாட்டு வாகன உற்பத்தியாளர்கள் கலந்துக் கொண்டு தங்களின் எதிர்கால வாகனங்களை காட்சிப்படுத்தினர். அந்தவகையில், கியா நிறுவனமும் அதன் அட்டகாசமான இவி9 எனும் அட்டகாசமான புதுமுக வாகனத்தை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது.

இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் ஆகும். ஆட்டோ எக்ஸ்போ வெளியீட்டைத் தொடர்ந்து இந்த காரை இன்று (மார்ச் 15) மீண்டும் வெளியீடு செய்திருக்கின்றது, கியா. இது உலகளாவிய வெளியீட்டு நிகழ்வாகும். இதன் வாயிலாக எலெக்ட்ரிக் கார் உலகளவில் விற்பனைக்கு செல்லும் என்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த வெளியீடு நிகழ்வு அரங்கேறுவதற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்னர், இணையத்தின் வாயிலாக எலெக்ட்ரிக் காரின் படங்கள் கசிந்தன.

இந்த நிலையிலேயே, அதிகாரப்பூர்வமாக கியா இவி9 உலகளவில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. கியா இவி9 ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்புக் கொண்ட எஸ்யூவி வாகனம் ஆகும். இந்த காரை இ-ஜிஎம்பி பிளாட்பாரத்தை அடிப்படையாகக் கொண்டே கியா நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. இதே தளத்தை பயன்படுத்தியே இவி6 எலெக்ட்ரிக் காரையும் நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது.

கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டபோது இருந்த அம்சங்கள் இப்போது பல மாற்றப்பட்டு இருக்கின்றன. இது உற்பத்திக்கான மாடல் என்பதால் இந்த மாற்றத்தை கியா செய்திருக்கின்றது. முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எல்இடி லைட்டில் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இருப்பினும், இப்போதும் அதன் கவர்ச்சி தோற்றம் குறையாமல் இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, காரின் அழகிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக ஃப்ளஷ் ரக ஹேண்டில்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, பெரிய அலாய் வீல்களும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

புகைப்படத்தில் காட்சியளிக்கும் கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் 21 அங்குலம் கொண்ட அலாய் வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அது விற்பனைக்கு வரும்போது 19 அங்குலம் அல்லது 20 அங்குலமாக மட்டுமே இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த வாகனம் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கும். இதையே தற்போது வெளியாகி இருக்கும் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. இதுதவிர, இதன் உட்பக்கம் இன்னும் பிரமாண்ட வசதிகள் கொண்ட இருக்கும் என்பதையும் கியா வெளியிட்டிருக்கும் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.

வழக்கமான அளவைக் காட்டிலும் சற்று பெரிய திரை, டிஜிட்டல் வசதிகளுடன் வழங்கப்பட்டு இருப்பதையும் இந்த படங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. இது 12.3 அங்குலம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் 5 அங்குல திரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கும். இந்த திரைகள் பொழுதுபோக்கு மற்றும் கார் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை அறிய உதவும். உயர் வீடியோ, ஆடிய மற்றும் டெலிமேட்டிக் வசதியையும் இந்த திரைகள் கியா அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது.

மேலும், அதிக சொகுசான இருக்கைகள், பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதில் இரண்டாம் வரிசை இருக்கைகளை 180 டிகிரி வரை சுழற்ற முடியும். ஆகையால், வயதனாவர்கள் அல்லது உடல் நிலை முடியாதவர்கள் பயணிக்க ஏற்ற வாகனமாக இது இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதன் வாயிலாக பிற பயணிகள் சுலபமாக ஏறவும், இறங்கிக் கொள்ளவும் முடியும்.

இவற்றுடன் பெரிய ஸ்டோரேஜ் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், உடனடியாக கேபினை குளிர்விக்கும் திறன் கொண்ட ஏசி வெண்டுகள் போன்ற அம்சங்களும் இவி9 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற சிறப்பம்சங்களில் மட்டுமில்லைங்க இந்த கார் ரேஞ்ஜ் தருவதிலும் மிக சிறந்த வாகனமாகக் காட்சியளிக்கின்றது.

ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. இந்த அதீத ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 77.4 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட இருக்கின்றது. அதேவேளையில் இந்த காரில் இரு விதமான மின் மோட்டார் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 200 எச்பி மற்றும் 400 எச்பி எனும் மாறுபட்ட திறன் கொண்ட மின் மோட்டார் தேர்விலேயே கிடைக்க இருக்கின்றது. இத்தகைய சூப்பரான காரையே உலகளவில் கியா வெளியீடு செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 11:16 [IST]
English summary
Kia ev9 electric suv unveiled officially
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+