Kia EV9 Features: சொகுசு பங்களாவுல கூட இவ்வளவு வசதிகள் இருக்காது!பணக்காரர்களே இந்த காரை வாங்க யோசிப்பாங்க!

கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தனது இவி9 காரை கான்செப்ட் காராக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இந்த காரின் புரோடெக்ஷன் வெர்ஷன் காரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்சிப்படுத்தியது. இந்த கார் இன்னும் ஒரு சில மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகி விற்பனைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் கியா நிறுவனம் தனது இவி9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த முழுமையான விபரங்களை வெளியிட்டுள்ளது. அதைத் தான் முதலில் பார்க்கப்போகிறோம். இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்மான இ-ஜிஎம்பி பிளாட்ஃபார்மில் உருவாகும் இரண்டாவது காராகும்.

Kia EV9 Features, Launch Details

இந்த கியா இவி9 எஸ்யூவி கார் 3 வரிசை சீட்டர் கொண்ட ஒரு காராக விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் 99.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் ஏறினால் 500 கி.மீ வரை தாராளமாகப் பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த காரில் 2 விதமான பேட்டரி சைஸ்கள் உள்ளன.

ஏற்கனவே நாம் சொன்னது போல 99.8 கிலோ வாட் ஹவர் பேட்டரி போல 76.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனும் இருக்கிறது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. ஆனால் 99.8 கிலோ வாட் ஹவர் பேட்டரியை கொண்ட காரில் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் வெர்ஷன்கள் உள்ளன.

Kia EV9 Features, Launch Details

இந்த கியா இவி9 கார் 541 கி.மீ ரேஞ்சை முழு சார்ஜில் வழங்குகிறது. அதை விட முக்கியமான அம்சம் இந்த காரில் சார்ஜிங்கிற்காக 800 வோல்ட் ஆக்கிடெக்ஷன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் இந்த கார் 200 கி.மீ வரை பயணிக்கும் அளவிலான சார்ஜை வெறும் 15 நிமிடத்தில் ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் ஏற்றிவிடும்.

இந்த கியா இவி 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 5 மீட்டர் நீளம் கொண்டது. இதனால் இந்த காரில் ஃபன்னான டிரைவிங் கிடைக்கும். இந்த காரில் லாங்க் ரேஞ்ச் மாடலில் உள்ள மோட்டாரை பொருத்தவரை 201எச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார்.

இந்த கியா இவி 9 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 9.4 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இதில் ஸ்டாண்டர்டு வெர்ஷன் கார் 215 எச்பி பவரையும் 350என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.2 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆல்வீல் டிரைவ் வெர்ஷனை பொருத்தவரை 380 எச்பி பவரையும்யும் 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துமு். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6 நொடியில் பிக்கப் செய்யும் இந்த இந்த காருக்கான டார்க் பூஸ்டரையும் இந்நிறுவனம் வழங்குகிறது.இதை பயன்படுத்தினால் டார்க் 700 என்எம் டார்க்காக மாறி 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.3 நொடியில் பிக்கப் செய்யும்.

கியா இந்த காரில் லெவல் 3 அடாஸ் தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளது. இந்த இவி9 காரின் ஹையர் ஸ்பெக் காரான ஜிடி-லைன் மாடலில் ஹைவே டிரைவிங் பைலட் புரோகிராம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரை சுற்றி 15 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் டிரைவிங்கை சுலபமாக்குகிறது.

இந்த சென்சார்கள் லைடர் லேசன் சென்சார், கேமரா, ரேசார், அல்ட்ராசோனிக் ஆகிய சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இவி9 காரின் ஜிடி-லைன் வெர்ஷன் கார் வரும் 2025ம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். இதில் உள்ள அடாஸ் 3 தொழிற்நுட்பம் குறிப்பிட்ட சில மார்கெட்டில் மட்டுமே விற்பனையாகும் எனக் கூறப்படுகிறது.

இந்த கியா இவி 9 காரை பொருத்தவரை 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் உட்புற கட்டமைப்புகள் எல்லாம் ரீசைக்களிள் செய்யப்பட்ட சோளம், கரும்பு சக்கை, இயற்கை எண்ணெய், ரீசைக்கிள்டு பெட் பாட்டில், ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் டேஷ் போர்டு தான் முக்கியமான அம்சம் மொத்தம் 3 ஸ்கிரீன்கள் உள்ளது. இதில் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இது போக ஒரு 5 இன்ச் டிஸ்பிளே ஸ்கிரீன் இருக்கிறது. இந்த காரின் சீட்களில் மசாஜிங் அம்சங்களை கியா நிறுவனம் வழங்குகிறது.

கியா நிறுவனத்தின் இந்த காரில் 14 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் இருக்கிறது. இது போக ஆம்பியன்ஸ் லைட்டிங், பெரிய சன்ரூஃப், ஆகிய அம்சங்களும், மிடில் ரோவில் கேப்டன் சீட் இருக்கிறது. இது 180 டிகிரி சாய்வாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசை சீட்டை மடக்கி அதிகமான பொருட்களை ஏற்றிக்செல்லும் வசதியும் இருக்கிறது.

கியா நிறுவனம் இந்த இவி9 காரை அமெரிக்கா, ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தாண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. 2024ம் ஆண்டு இந்தியா சாலைகளில் இந்த காரை காண வாய்ப்பு இருக்கிறது.

கியா நிறுவனம் ஆண்டிற்கு 1 லட்சம் கார்களையாவது தயாரித்து விற்பனை செய்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளது. இந்த காரின் அம்சங்களைப் பார்த்தால் நிச்சயம் இதன் விலை மிக அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கலாம். இந்த கார் விற்பனைக்கு வரும் போது தான் இதன் விலை விபரம் தெரியவரும்.

டிரைவ் ஸ்பார்க் என்ன நினைக்கிறது: இந்த காரில் உள்ள அம்சங்களைப் பார்த்தால் பெரிய சொகுசு பங்களாவே தோற்றுப்போகும் அளவிற்கு ஏகப்பட்ட விஷயங்களை கியா நிறுவனம் கட்டமைத்துள்ளது. இப்படியான ஒரு காரை கியா நிறுவனம் வெளியிடுவது மூலம் பிரிமியம் செக்மெண்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 29, 2023, 12:40 [IST]
English summary
Kia ev9 features range launch and level 3 adas details revealed
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+