இன்னும் 3 நாளில் ரிலீஸ் ஆக போற காரில் இப்படி ஒரு அப்டேட்டா? ரொம்ப ஆச்சரியமா இருக்குதே!

இந்த மாதம் 4 தேதி அறிமுகமாக உள்ள கியா செல்டோஸ் அப்டேட்டட் வெர்ஷன் காரில் புதிய வசதிகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட டீசர் வீடியோ மூலம் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கியா நிறுவனம் இந்தியாவில் காலடித்தடத்தைப் பதித்து தற்போது மிக முக்கியமான ஒரு நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. இன்று சாலைகளில் கியா நிறுவனத்தின் கார்களை அனைத்து ஊர்களிலும் காண முடியும். அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது.

kia facelift teased

கியா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் செல்டோஸ் காரும் ஒன்று. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் கிரெக்டா, டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கி வருகிறது. இந்நிலையில் கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரை அப்டேட் செய்து வெளியிட முடிவு செய்துள்ளது.

வரும் ஜூலை மாதம் 4 தேதி அப்டேட் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த கார் அறிமுகத்துக்கு முன்னரே இந்த கார் குறித்த டீசரை கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இந்த காரில் உள்ள இரண்டு முக்கியமான அப்டேட்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

kia facelift teased

அதன்படி கியா செல்டோஸ் அப்டேட் வெர்ஷன் காரில் பேனரோமிக் சன் ரூஃப் இருப்பது உறுதியாகியுள்ளது. பழைய கியா செல்டோஸ் காரில் சிறிய எலெக்ட்ரிக் சன் ரூஃப் தான் இருந்தது. இந்திய மக்கள் மத்தியில் பேனரோமிக் என்பது மிக முக்கிய தேவையாக பார்க்கப்படுவதால் இந்த அப்டேட்டை கியா நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இரண்டாவது முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த டீசர் மூலம் கியா செல்டோஸ் காரில் அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் எனப்படும் அடாஸ் தொழிற்நுட்பம் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் லெவல் குறித்த தகவல்களை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இது பல கார்களில் இல்லாத புதிய தொழிற்நுட்பமாகும்.

kia facelift teased

இந்த டீசர் வீடியோவில் லேன்கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் இருப்பது தெரிய வருகிறது. இது எல்லாம் அடாஸ் தொழில்நுட்பத்திற்கு உட்பட்ட அம்சங்களாக இருக்கிறது. இந்த அடாஸ் மற்றும் பேனரோமிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கலாம்.

இந்த டீசர் வீடியோவை பொறுத்தவரை முதலில் புதிய செல்டோஸ் காரில் உள்ள பின்புறம் காட்டப்படுகிறது. அதில் இந்த காரில் மாற்றியமைக்கப்பட்ட டெயில் லைட் டிசைன் இருப்பது தெரிய வருகிறது. பின்புறம் நீளமான எல்இடி டெயில் எல்இடி லைட் பொருத்தப்பட்டுள்ளது. நடுவில் கியா லோகோ இருக்கிறது, பின்புற கேட்டின் வடிவமைப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டு டிசைனை பொருத்தவரை கிட்டத்தட்ட பழைய காரில் உள்ள அதே டிசைன் தான் இதிலும் இருக்கிறது. உட்புறத்தை பொருத்தவரை பெரிய டூயல் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 10.25 இன்ச் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டமும், டிரைவர் டிஸ்ப்ளேயும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமாவ மாற்றம் தான்.

புதிய கியா செல்டோஸ் காரின் இன்ஜினை பொருத்தவரை மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஐஎம்டி கியர்பாக்ஸுடன் இணைக்கப்படுகிறது. அடுத்த ஆப்ஷனாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது இது கியா கேரன்ஸ் காரிலும் இருக்கிறது.

கடைசி ஆப்ஷனாக 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் இருக்கிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இந்தக் காருக்கான அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் தற்போது கியா டீலர்ஷிப்களில் நடந்து வருகிறது ரூ 25,000 முன்பணம் செலுத்தி இந்த காரை புக் செய்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கியா செல்டோஸ் காருக்கு என்று மிகப்பெரிய அளவில் வரவேற்பிருக்கிறது. இதன் அப்டேடட் வெர்ஷனை காண ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். இன்னும் மூன்று நாட்களில் வரப்போகும் இந்த காருக்கு இப்படி ஒரு அப்டேட்டை கொடுத்து கியா அதன் ரசிகர்களை ஆச்சரியபடுத்தி உள்ளது. இந்த அப்டேட் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்க

More from DriveSpark

Article Published On: Saturday, July 1, 2023, 11:25 [IST]
English summary
Kia gives a sneak peek of the seltos facelift ahead of its july 4 launch
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X