மார்ச் மாசம் எக்குதப்பா எகிறப் போகும் கியா காரின் விலை! இப்பவே காரை வாங்குனா ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்!

மார்ச் மாதம் முதல் கியா நிறுவனம் தனது கார்களுக்கான விலையை வரும் மார்ச் மாதம் முதல் விலையேற்றப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

மத்திய அரசு இந்தியாவில் பிஎஸ்6 மாசு கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. தற்போது இருக்கும் நடைமுறை வரும் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்க முடியும். ஆட்டோமொபைல் துறையைப் பொருத்தவரை தற்போது உள்ள இன்ஜின்களில் ரியல் டைமில் மாசு வெளியேற்றத்தைக் கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும் என்பதால் தான் புதிய கட்டுப்பாட்டில் உள்ள விஷயம்.

மார்ச் மாசம் எக்குதப்பா எகிறப் போகும் கியா காரின் விலை! இப்பவே காரை வாங்குனா ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்!

தற்போது இன்ஜின் தயாரிப்பின்போது டெஸ்ட் செய்யப்பட்டாலே போதுமானதாக இருந்தது. ஆனால் இனி காரை மக்கள் பயன்படுத்தும் போது காரின் இன்ஜினிலிருந்து வெளியேறும் மாசு அளவு அதிகமாக இருந்தால் அது குறித்து ஓட்டுநருக்கு எச்சரிக்கை வேண்டும். இதை வைத்து காரின் உரிமையாளர் காரை சர்வீஸிற்கு கொண்டு செல்வார். இதன் மூலம் மாசு வெளியேறுவது கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்நிலையில் கியா நிறுவனம் தனது இன்ஜின்களின் இந்த கருவியைப் பொருத்தும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் கியா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன் படி கியா கார்களின் விலை வரும் மார்ச் மாதம் ரூ25 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை உயர்த்தப்படவுள்ளது. மாடல் மற்றும் இன்ஜினை பொருத்து விலை உயர்வு மாறுபடுகிறது. இதில் சந்தோஷமான செய்தி என்னவென்றால் கியா நிறுவனம் தனது டீசல் இன்ஜினை நிறுத்தாமல் புதிய விதிமுறையின்படி தொடர்ந்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே கியா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் தான் தனது கார்களுக்கான விலையை அதிகரித்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டில் இரண்டாவது முறையாகத் தனது கார்களின் விலையை அதிகரித்துள்ளது. கியா செல்டோஸ் கார் பெட்ரோல் வேரியன்ட் ரூ40 ஆயிரம் வரையிலும், டீசல் வேரியன்ட் ரூ50 ஆயிரம் வரையிலும், கியா சோனட் கார் பெட்ரோல் வேரியன்ட் ரூ30 ஆயிரம் வரையிலும், டீசல் வேரியன்ட் ரூ45 ஆயிரம் வரையிலும், கியா கேரன்ஸ் கார் பெட்ரோல் வேரியன்ட் ரூ30 ஆயிரம் வரையிலும், டீசல் கார் ரூ50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் கியா கார்கள் கடந்த ஜனவரி மற்றும் மார்ச் விலை உயர்வைச் சேர்த்து செல்டோஸ் கார் ரூ1 லட்சம் வரையிலும், கேரன்ஸ் கார் ரூ95 ஆயிரம் வரையிலும், சோனட் கார் ரூ85 ஆயிரம் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கியா நிறுவனத்திடம் தற்போது உள்ள விதிப்படி தயாரிக்கப்பட்டுள்ள கார்கள் பிப்ரவரி 28ம் தேதிக்குள் விற்றுத் தீர்க்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் புதிய விதிப்படி தயாரிக்கப்பட்ட கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

கியாவின் இந்த அறிவிப்பில் அதன் கார்னிவெல் கார் குறித்த தகவல்கள் இல்லை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கியா நிறுவனம் கார்னிவெல் காரின் 4ம் தலைமுறை காரை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. புதிய விதிப்படி தயாரிக்கப்படும் கார்களில் இன்ஜின் கிட்டத்தட்ட தற்போது உள்ள காரின் அதே இன்ஜின் தான்.

கியா சோனட் காரை பொருத்தவரை 116 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் இன்ஜின் மட்டுமு் 160 பிஎஸ் பவர் மற்றும் 260 என்எம் டார்க் திறன் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் சமீபத்தில் ஐதராபாத் பகுதியில் டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் இந்த காரை தற்போது வெளியிடும் எண்ணம் கியா நிறுவனத்திடம் இல்லை. இந்த கார் அடாஸ் தொழிற்நுட்பத்துடன் வரும் 2023 மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 12, 2023, 13:30 [IST]
English summary
Kia hiked car price after rde norms know details
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+