கியா, ஹூண்டாய் கார் ஓனர்களுக்கு ரூ5 லட்சம் நஷ்ட ஈடு! ஒரு டிக்டாக் வீடியோவால் ரூ16ஆயிரம் கோடியை இழப்பு!

கியா, ஹூண்டாய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ16.5 ஆயிரம் கோடி பணத்தை நஷ்ட ஈடாக வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வைரலான ஒரு டிக் டாக் வீடியோவால் இந்த இரு நிறுவனங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம் வாருங்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கியா மற்றும் ஹூண்டாய் கார்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் சாவியே இல்லாமல் காரை ஒரு சில நொடிகளில் ஸ்டார்ட் செய்ய முடியும் என்றும், இப்படியாக சில கார் திருட்டு சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளதாகவும் டிக் டாக்கில் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ மிக வைரலாக பரவியது.

kia hyundai compensation

அதுவரை தன் கார் எப்படித் திருடப்பட்டது என தெரியாமல் தவித்த பலருக்கும் விடை கிடைத்தது. அமெரிக்காவில் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு குறைபாடு கொண்ட கார்கள் என்ற பேச்சு எழுந்தது. மக்களுக்கு அந்நிறுவனத்தின் வாகனங்கள் மீது மோகம் குறைந்தது. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களும் தங்கள் காரின் சாஃப்ட்வேரை அப்டேட் செய்தனர்.

ஆனால் இந்த வீடியோ வைரலான பிறகு திருடர்கள் உஷாராகி இந்த காரை திருடி வருகின்றனர். சிலர் இந்த கார் திருட்டைத் தடுக்க வெளிமார்கெட்டில் விற்கப்படும் ஆண்டி தெஃப்ட் அலாரத்தை தங்கள் காரில் இன்ஸ்டால் செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கார் வாங்கியவர்கள் பலர் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

kia hyundai compensation

இந்த வழக்கில் இந்த இரு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட 90 லட்சம் அமெரிக்கர்களுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இந்த இரு நிறுவனங்களும் பாதிக்கப்பட்வர்களுகு்கு நஷ்டஈடு வழங்க ஒத்துக்கொண்டது. அதன்படி யார் யார்க்கு எவ்வளவு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விளக்கமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கியா மற்றும் ஹூண்டாய் கார்களின் சாஃப்ட்வேர் அப்டேட் செய்ய முடியாத கார்களை வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் 300 அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை வைத்து அவர்கள் வெளிமார்கெட்டில் ஸ்டியரிங் லாக் அல்லது வேறு கார் திருட்டைத் தடுக்கும் கருவிகளை வாங்கி காரில் பொருத்திக்கொள்ள முடியும்.

அதன்படி இந்த பாதுகாப்பு குறைபாட்டால் கார் திருட்டு சம்பவம் நடந்திருந்தால் அவர்களுக்கு மொத்தமும் நஷ்டம் எனக்கணக்கிட்டு ஒரு காருக்கு தலா 6125 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ5 லட்சம் வரை நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வாகனத்தின் திருட்டு முயற்சி நடக்கும் போது வாகனத்திற்குச் சேதம், அல்லது வாகனத்தின் உள்ள இருந்த பொருளுக்குச் சேதம் ஆகிய விளைவுகளைச் சந்தித்தவர்களுக்கு 3375 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ2.79 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த பாதுகாப்பு கருவியால் ஏற்பட்ட விளைவால் இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகமானது. இது போக கார் வாடகை, டாக்ஸி செலவு, மற்ற போக்குவரத்து செலவுகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படாது என்றும், அதே நேரம் காருக்காட டோ செலவு, கார் திருடப்பட்ட பின்பு விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட செலவு, திருடப்பட்ட பின்பு பயன்படுத்தப்பட்ட டோல்கேட் செலவு, மற்றும் போக்குவரத்து விதிமுறை மீறல் அபராதங்கள் எதற்கும் கியா,ஹூண்டாய் நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இப்படியான நஷ்ட ஈடுகளைக் கணக்கிட்டால் கியா, ஹூண்டாய் நிறுவனம் இந்திய மதிப்பில் மொத்தம் ரூ16 ஆயிரம் கோடியை நஷ்ட ஈடாக மட்டுமே வழங்க வேண்டும். இதற்கு கியா, மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் ஒத்துக்கொண்டுவிட்டன. தற்போது இந்த நஷ்ட ஈட்டை வழங்கும் பணியைத் துவங்கவுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு டிக்டாக் வீடியோ இந்த நிறுவனங்களையும் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்த நிறுவனங்களை வாங்கிய வாடிக்கையாளர்களையும் வெகுவாக பாதித்துள்ளது. ஒரு வாகனம் வாங்கும் போது ஏராளமான சோதனைகள் செய்யப்படுவது இப்படியான பிரச்சனைகள் வராமல் இருப்பதற்காகத் தான். ஆனால் அதையும் தாண்டி வந்த இந்த சின்ன பிரச்சனை இப்பொழுது ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, May 19, 2023, 16:00 [IST]
English summary
Kia hyundai agreed to pay compensation to settle case over car thefts
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+