சந்தோஷம்யா! வெளிநாட்டு கார் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்! விஷயத்தை கேட்டதும் கதிகலங்கி போன இந்திய நிறுவனங்கள்!

தென் கொரியாவை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). இது ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கியா செல்டோஸ் (Kia Seltos) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ததன் மூலம், இந்நிறுவனம் இந்திய சந்தையில் நுழைந்தது.

தற்போதைய நிலையில் செல்டோஸ் மட்டுமல்லாது, கியா சொனெட் (Kia Sonet), கியா கேரன்ஸ் (Kia Carens) மற்றும் கியா இவி6 (Kia EV6) ஆகிய கார்களையும் இந்நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், கியா இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிப்பு குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

2023 Kia Seltos

இதன்படி கியா நிறுவனத்திற்கு இந்தியாவில் தற்போதைக்கு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லையாம். 2025ம் ஆண்டுக்கு பிறகுதான் கியா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர பிரதேச மாநிலம் அனந்த்ப்பூர் பகுதியில் கியா இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

ஒரு வருடத்திற்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி என்ற திறனுடன் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டில் வருடத்திற்கு 3.50 லட்சம் கார்கள் என இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டது. ஆனால் வரும் 2025ம் ஆண்டிற்கு பின்னர் இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறனை ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் என்று அதிகரிப்பதற்கு கியா இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2023 Kia Seltos Rear Design

ஆனால் இந்தியாவில் இரண்டாவதாக ஒரு தொழிற்சாலையை அமைக்கும் திட்டம் எதுவும் கியா நிறுவனத்திற்கு தற்போதைக்கு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே உள்ள அனந்த்ப்பூர் தொழிற்சாலையிலேயே, உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்கிடையே ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய தொழிற்சாலையை கைப்பற்றியது.

அது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜென்ரல் மோட்டார்ஸ் (General Motors) நிறுவனத்தின் தாலேகான் தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலையை பயன்படுத்தும் திட்டங்கள் எதுவும் கூட கியா இந்தியா நிறுவனத்திற்கு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுருக்கமாக சொல்லப்போனால் அனந்த்ப்பூர் தொழிற்சாலையிலேயே 2025ம் ஆண்டிற்கு பிறகு உற்பத்தி திறனை ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் என கியா இந்தியா நிறுவனம் அதிகரிக்கவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா இந்தியா நிறுவனத்தின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தொடர்ச்சியாக புதிய கார்கள் அறிமுகம், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம் உள்ளிட்ட காரணங்களால், கியா நிறுவனம் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து கொண்டும் உள்ளது.

எனவே எதிர்காலத்தில் கார் உற்பத்தியை அதிகரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதைப்பற்றி கியா இந்தியா நிறுவனம் தற்போதே சிந்திக்க தொடங்கியிருப்பது நல்ல விஷயம் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கார்களை விரைவாக டெலிவரி செய்ய முடியும். இல்லாவிட்டால் கார்களின் காத்திருப்பு காலம் (Waiting Period) அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு சிரமம் ஏற்படும்.

இதை மனதில் வைத்து, கியா இந்தியா நிறுவனம் கார்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருப்பது பாராட்டுக்குரியது. கியா நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டம், அதன் முக்கியமான போட்டி நிறுவனங்களான மாருதி சுஸுகி (Maruti Suzuki), டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற உள்ளூர் நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 1, 2023, 16:33 [IST]
English summary
Kia india production increase plan all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+