சத்தமே இல்லாம வளந்துட்டாங்க! இந்திய நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வெளிநாட்டு கம்பெனி! இதை யாருமே எதிர்பாக்கல!

இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). இதை நிரூபிக்கும் வகையில் நடப்பு 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கியா நிறுவனம் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கியா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் வெறும் 18,121 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24,600 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கார் விற்பனையில் 35.80 சதவீத வளர்ச்சியை கியா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

சத்தமே இல்லாம வளந்துட்டாங்க! இந்திய நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வெளிநாட்டு கம்பெனி! இதை யாருமே எதிர்பாக்கல!

இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவனத்தின் கார் என்ற பெருமையை கியா சொனெட் (Kia Sonet) தட்டி சென்றுள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கியா நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 9,836 கியா சொனெட் கார்களை விற்பனை செய்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் பட்டியலில் கியா செல்டோஸ் (Kia Seltos), இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கியா செல்டோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை 8,012 ஆக உள்ளது.

சத்தமே இல்லாம வளந்துட்டாங்க! இந்திய நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வெளிநாட்டு கம்பெனி! இதை யாருமே எதிர்பாக்கல!

அதே சமயம் இந்த பட்டியலில் கியா கேரன்ஸ் (Kia Carens), மூன்றாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கியா நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் 6,248 கேரன்ஸ் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதுதவிர கியா கார்னிவல் (Kia Carnival) காரின் விற்பனை எண்ணிக்கையும் சிறப்பாக உள்ளது.

இதுவும் எம்பிவி ரகத்தை சேர்ந்த கார்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் கியா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையில் கார்னிவல் காரின் பங்களிப்பு 504 ஆகும். இதன் மூலம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் பட்டியலில் நான்காவது மற்றும் கடைசி இடத்தை கார்னிவல் பிடித்துள்ளது.

இவை எல்லாம் தவிர கியா இவி6 (Kia EV6) என்ற காரையும் அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், கியா இவி6 எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு கொண்டுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பது, டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற இந்திய நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கியா நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில் இன்னும் ஒரு சில கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டால், மிகப்பெரிய உயரத்தை எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 8, 2023, 14:33 [IST]
English summary
Kia india sales report february 2023 sonet seltos carens carnival ev6
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+