இந்திய ராணுவ வீரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்த விலையில் மிலிட்டரி கேண்டீனில் இனி கியா கார்கள் கிடைக்கும்!

ராணுவ வீரர்களுக்கு மிலிட்டரி கேன்டீன் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் எல்லாம் விற்பனை செய்யப்படும். வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் முதல் கார், பைக் என விலை உயர்ந்த பொருட்கள் வரை இந்த மிலிட்டரி கேன்டீனில் கிடைக்கும். இந்த மிலிட்டரி கேண்டீன் மூலம் பலர் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை எல்லாம் வாங்கியிருப்பார்கள்.

இந்நிலையில் கியா நிறுவனத்திற்கு இந்த மிலிட்டரி கேண்டீனில் தனது பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்ததுள்ளது. கியா நிறுவனத்தின் தயாரிப்புகளையும் இனி மிலிட்டரி கேண்டீன் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் அவர்களுக்குக் குறைந்த விலையில் கியா கார்கள் கிடைக்கும்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்த விலையில் மிலிட்டரி கேண்டீனில் இனி கியா கார்கள் கிடைக்கும்!

அந்த வரிசையில் தற்போது மிலிட்டரி கேண்டீனிற்காக கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரை முதல் தயாரிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்தாக சோனட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களும் மிலிட்டரி கேண்டீன் மூலம் விற்பனைக்கு வரவுள்ளன. கியா நிறுவனம் மிலிட்டரி கேண்டீன் வழியாகத் தனது முதல் செடோஸ் காரை மேஜர் ஜெனரல் விக்கல் ஷானிக்கு வழங்கியது.

இந்த செல்டோஸ் கார் விற்பனைக்கு அறிமுகமான நிலையில் இப்பொழுதே மிலிட்டரி கேண்டீன் மூலம் சுமார் 100 கார்களுக்கான புக்கிங் குவிந்துவிட்டது. இது குறித்து கியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் தொழிற் துறை தலைமை அதிகாரி மயோங்-சிக் சோஹ்ன் கூறும்போது : "ராணுவ வீரர்கள் தான் உண்மையான ஹீரோக்கள், அவர்களுக்கு புதிய விதமாக உதவுவதில் பெருமை கொள்கிறோம். இந்தியா நாட்டை ராணுவ சீருடையுடன் பாதுகாக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் எங்களைப் பங்களிப்பைச் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்த விலையில் மிலிட்டரி கேண்டீனில் இனி கியா கார்கள் கிடைக்கும்!

மிலிட்டரி கேண்டீன்கள் மூலம் கியா நிறுவனத்தின் தயாரிப்புகளை ராணுவ வீரர்களுக்கு வழங்கவிருக்கிறோம். முதல் வாடிக்கையாளராக மேஜர் ஜெனரல் விக்கல் ஷானி எங்கள் காரை வாங்கியுள்ளார். கியா இந்தியா புதிய மைல் கல்லைப் பதித்துள்ளோம். " எனக் கூறினார்.

இந்திய ராணுவ வீரர்கள் இந்த காரை மிலிட்டரி கேண்டீனில் குறைந்த விலைக்கு வாங்க முடியும். இந்திய அரசு ராணுவ வீரர்களின் தியாகத்தை மனதில் வைத்து அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் பலனளிக்கும் வகையில் இந்த ராணுவ கேண்டீனை நடத்தி வருகிறது. கியா நிறுவனத்தின் இந்த காரை வாங்க ராணுவ வீரர்கள் பலர் தயாராகி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 14, 2023, 12:40 [IST]
English summary
Kia india started csd supply to the Armed Forces
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+