டீசல்/டர்போ பெட்ரோல் இன்ஜின் கார்களில் மேனுவல் கியரை நிறுத்திய கியா! அதுக்கு பதிலா தான் இந்த கியர் பாக்ஸ்!
கியா நிறுவனம் தனது டீசல், டர்போ பெட்ரோல் இன்ஜினிற்கு கியர் பாக்ஸாக தனது இன்டலிஜென்ட் டிரான்ஸ்மிஷன் டெக்னாலஜி கியர் பாக்ஸை ஸ்டாண்டர்டாக மாற்றி அறிவித்துள்ளது. இதன் மூலம் கியா டீசல் கார்களில் இனி மேனுவல் கியர் ஆப்ஷன் இருக்காது என்பது தெரியவந்துள்ளது.
கியா நிறுவனம் கடந்த மாதம் தான் 2023 ஆர்டிஇ கட்டுப்பாட்டிற்காகத் தனது இன்ஜினை அப்டேட் செய்தது. தற்போது கியா செல்டோஸ், சோனட் மற்றும் கேரன்ஸ் ஆகிய கார்களில் டீசல் இன்ஜின் ஆப்ஷனை வைத்திருக்கிறது. அதில் தற்போது 6ஐஎம்டி கியர் பாக்ஸை ஸ்டாண்டர்டாக மாற்றி அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையை கியா நிறுவனம் கடந்த ஏப்1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. கியா சோனட் காரை பொருத்தவரை மொத்தம் 6 வேரியன்ட்களில் டீசல் இன்ஜின் பொருத்தும் ஆப்ஷன் இருக்கிறது. அதில் அனைத்தும் இந்த 6ஐஎம்டி கியர் பாக் தான் இணைக்கப்படுகிறது. இந்த கியா சோனட் காரை பொருத்தவரை ரூ9.95 லட்சம் முதல் ரூ13.89 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.
அடுத்ததாக கியா செல்டோஸ் கார். இந்த காரில் 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த காரில் மொத்தம் 5 வேரியன்ட்களில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இந்த கார் ரூ12.39 லட்சம் முதல் ரூ17.59 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.

அடுத்தாக கியா கேரன்ஸ் கார், இந்த காரில் மொத்தம் 5 விதமான வேரியன்ட்கள் உள்ளது. ஒவ்வொரு வேரியன்ட்டிற்கும் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்த காரில் இரண்டு இன்ஜின்களிலுமே 6ஐஎம்டி கியர் பாக்ஸ் தான் பொருத்தப்படுகிறது.
இந்த காரில் பிரிமியர், பிரஷ்டீஜ், பிரஷ்டீஜ் +, லக்ஸரி, மற்றும் லக்ஸரி + ஆகிய வேரியன்ட்களில் லக்ஸரி + வேரியன்ட்டில் மட்டும் 7 மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்கள் உள்ளது. மற்ற வேரியன்ட்கள் 7 சீட்டர் ஆப்ஷன் உடன் இருக்கிறது. இந்த கார் ரூ12 லட்சம் முதல் ரூ18 லட்சம் வரையில் விற்பனையாகிறது.

கியா நிறுவனம் முதன் முறையாக ஐஎம்டி கியர் பாக்ஸை கியா செல்டோஸ் காரில் 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக சோனட் காரில் 2021ல் அறிமுகப்படுத்தியது. இதில் சோனட் ஐஎம்டி கார் 2022ல் பிரபலமான காராக மாறியது. அதிகமாக வாங்கப்பட்ட காராக இருந்தது.
இந்த ஐஎம்டி கியர் பாக்ஸை பொருத்தவரை கிளட்ச் இல்லாமல் செயல்படும் தொழிற்நட்பமாகும். இது அதிகமான கியரில் குறைந்த வேகத்தில் பயணித்தாலும் இன்ஜின் ஸ்டால் ஆகும் பிரச்சனை எதுவும் இல்லாமல் இருக்கிறது. இந்த காரில் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் யூனிட் மூலம் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








