இனி கார் வாங்கின மாதிரிதான்... சொன்ன மாதிரியே விலைய ஏத்தி புலம்ப வச்சிட்டாங்க! விலைய பாத்து ஒறஞ்சு போய்டாதீங்க
புலம்ப வச்சுட்டாங்க:
ஏற்கனவே புதிய வாகனங்களின் விலை இந்தியாவில் பலமடங்கு அதிகமாக இருப்பதாக நம்மில் சிலர் புலம்பிக் கொண்டிருப்பதை நம்மால் கேட்க முடிகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இன்னும் காஸ்ட்லியானதாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் கார்கள் சில மாற தொடங்கியிருக்கின்றன. ஆமாங்க புதிய கார்களின் விலையை வாகன உற்பத்தியாளர்கள் தற்போது உயர்ந்துள்ளது. 2023 ஜனவரி முதல் வாகன உற்பத்தியாளர்கள் உயர்த்தப்பட்ட விலையில் புதிய வாகனங்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாக 2022 ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் தகவல்கள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்தும் விதமாக முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே விலையை உயர்த்தி வாகன விற்பனையைத் தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உருவாகி இருக்கும் கியாவும், அதன் புதிய கார்களின் விலையை உயர்த்தி இருக்கின்றது. 2023 ஜனவரி முதல் விலையை உயர்த்தி இருக்கின்றது. விலை உயர்வை செய்ய இருப்பதாக நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அது சொன்னபடியே அதைச் செய்துக் காட்டி இருக்கின்றது.

கியா இப்படி செய்யும்னு எதிர்பார்க்கல
நிறுவனம், குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் தொடங்கி அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை புதிய வாகனங்களின் விலையை உயர்த்தி இருக்கின்றது. வேரியண்ட் வாரியாக விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. கியாவின் பெரும்பாலான கார் மாடல்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் கார்கள் ஒட்டுமொத்தமாகவே 1,81,583 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகிய நிலையில், 2022 ஆம் ஆண்டில் அது 2,54,556 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளன. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கியா விலை உயர்வைச் செய்திருக்கின்றது.
எவ்வளவு ரூபா உயர்த்தி இருக்காங்க?
கியா நிறுவனம் இந்திய சந்தையில் சொனெட், செல்டோஸ், கேரன்ஸ், கார்னிவல் மற்றும் இவி 6 எனும் எலெக்ட்ரிக் கார் ஆகியவற்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் விலையையே நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது. சொனெட்டின் விலை ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் தேர்விற்கு ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 25 ஆயிரம் வரையிலும், டீசலின் அனைத்து வேரியண்டுகளுக்கும் ரூ. 40 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சொனெட்டோட ஆரம்ப விலையே இவ்ளோவா!
இந்த புதிய விலை உயர்வால் கியா சொனெட்டின் ஆரம்ப விலை ரூ. 7.69 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ரூ. 7.49 லட்சத்திற்கே இந்த கார் கிடைத்து வந்தது. இதேபோல், செல்டோஸ் மாடலின் விலையிலும் பெரும் தொகை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த மாடலின் விலை ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 50 ஆயிரம் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த காரிலும் சொனெட்டை போல் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் பெட்ரோல் தேர்வின் விலை ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து டீசல் மோட்டார் தேர்வுகளுக்கு ரூ. 50 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கேரன்ஸையும் விட்டு வைக்கல
இதுமட்டுமில்லைங்க நிறுவனத்தின் ஃபேமஸான எம்பிவி கார் மாடலான கேரன்ஸின் விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய இரு கார் மாடல்களைப் போலவே கேரன்ஸின் அனைத்து வேரியண்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 45 ஆயிரம் வரை இந்த மாடலின் விலையில் உயர்வு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் தேர்வுகளின் விலையில் ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 25 ஆயிரம் வரையிலும், அனைத்து டீசல் தேர்வுகளின் விலையும் ரூ. 45 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் காரணத்தினால் கேரன்ஸின் ஆரம்ப விலை ரூ. 10.19 லட்சமாக உயர்ந்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அட இப்போதான் அறிமுகம் பண்ணினாங்க அதுக்குள்ள இதோட விலையையும் உயர்த்திட்டாங்களா?
கியா நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக இவி6 இருக்கின்றது. இந்த கார் மாடலின் விலையையும் கியா உயர்த்தி இருக்கின்றது. ஏற்கனவே மிகவும் காஸ்ட்லியான எலெக்ட்ரிக் காராக இது காட்சியளிக்கின்றது. இந்த நிலையில் இதை மேலும் காஸ்ட்லியானதாக மாற்றி இருக்கின்றது புதிய விலை உயர்வு. ரூ. 59.95 என்கிற ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்து வந்த நிலையில், அதன் விலையில் ரூ. 1 லட்சம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது கியா.
இதனால் இதன் ஆரம்ப விலை ரூ. 60.95 லட்சமாக உயர்ந்துள்ளது. இரு வேரியண்டுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இரண்டின் விலையிலும் ரூ. 1 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் டிரைவ் எனும் இரட்டைத் தேர்வுகளில் அது விற்பனக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால், பேட்டரி பேக் விஷயத்தில் ஒற்றை தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 528 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இந்த சூப்பரான ரேஞ்ஜிற்காக நிறுவனம் இவி6 காரில் 77.4kWh பேட்டரி பேக்கை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை 350 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்துகொள்ள முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் வெறும் பதினெட்டே நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜேறிவிடும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் காரின் விலையிலேயே உச்சபட்ச உயர்வை கியா செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








