இவ்ளோ அழகான எலெக்ட்ரிக் காருக்கு இவ்ளோதான் விலையா!! டியாகோ இவிக்கு மட்டுமல்ல கோமெட் இவிக்கும் இது வந்தா ஆப்பு
ஒட்டுமொத்த இந்தியர்களின் எதிர்பார்ப்பாக மலிவு விலை எலெக்ட்ரிக் கார்கள் இருக்கின்றன. இந்தியர்களின் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இப்போதைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி ஆகிய இரு நிறுவனங்களும் மலிவு விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.
டாடா டியாகோ இவி-யையும், எம்ஜி கோமட் இவி-யையும் மலிவு விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கார்களின் வரிசையில் விரைவில் ஓர் புதுமுக கார் இணைவதற்கான சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது. உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான கியா, ரே இவி எனும் குட்டி எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது.

இது ஓர் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக குறைவான ரேஞ்ஜை மட்டுமே வழங்கக் கூடிய ஓர் மின்சார காராக மட்டுமே இது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த க்யூட்டான எலெக்ட்ரிக் காரை 27.35 தென் கொரிய ஒன்-களுக்கு விற்பனைச் செய்ய இருக்கின்றது, கியா.
இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ. 17 லட்சம் ஆகும். "இது உங்களுக்கு குறைவான விலையா" என உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ரூ. 9 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் இந்திய வருகை பற்றிய எந்தவொரு தகவலையம் கியா நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

அதேநேரத்தில் இது எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் எம்ஜி கோமெட்டிற்கு மிக சிறந்த போட்டியாளனாக மாறும். கியா ரே இவி ஓர் முழு சார்ஜில் 205 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும்.
இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 35.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முந்தைய வெர்ஷனில் 16.4 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டது. புதிய பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய ஆறு மணி நேரங்களே போதுமானது என கூறப்படுகின்றது. 7 kW தொடங்கி 150 kW வரை என பலதரப்பட்ட சார்ஜிங் பாயிண்டுகளை பயன்படுத்தி இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
மோட்டாரை பொருத்தவரை இந்த காரில் 86 எச்பி மற்றும் 146 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் தற்போது தென் கொரியாவிலும், உலக நாடுகள் சிலவற்றிலும் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மிகவும் குட்டியான தோற்றம் கொண்ட இந்த காரை 3,600 மிமீ நீளம் மற்றும் 1,600 மிமீ அகலம் கொண்டதாக கியா உருவாக்கி இருக்கின்றது.
மேலும், மாருதி சுஸுகியின் வேகன்ஆர் காரை போலவே உயரமான வாகனமாகவும் இதனை கியா வடிவமைத்திருக்கின்றது. ஆகையால், ஹெட்ரூமை பொருத்தவரை எந்தவொருசிக்கலும் இந்த காரில் இருக்காது. மேலும், சிறப்பம்சங்களும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. 10.25 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், எலெக்ட்ரானிக் ஷிஃப்ட் லிவர், கூடுதல் ஸ்டோரேஜ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த எலெக்ட்ரிக் காரில் உள்ள அனைத்து இருக்கைகளையும் மடித்து வைத்துக் கொள்ள முடியும் என கியா தெரிவித்து இருக்கின்றது. இதன் வாயிலாக கியா ரே இவியை கார்கோ வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான காரையே கியா நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த குட்டி ரக எலெக்ட்ரிக் காருக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே இந்தியாவிலும் இந்த குட்டி எலெக்ட்ரிக் காரை கியா விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது எப்போது அரங்கேறும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.


Click it and Unblock the Notifications








