Kia Waiting Period இவ்வளவு நாள் தானா? செமயா குறைச்சிட்டாங்க!

கியா நிறுவனம் தனது கார்களுக்கான காத்திருப்பு காலத்தை இந்த ஏப்ரல் மாதம் கணிசமாக குறைத்துள்ளது. இதனால் பல வேரியன்ட்களுக்கு 28 வாரங்கள் வரை இருந்த காத்திருப்பு காலம் 12 வாரங்களாக குறைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

கியா கேரன்ஸ் எம்பிவி காரின் என்ட்ரி லெவல் காரான பிரிமியம் மற்றும் பிரஸ்டீஜ் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் கியர் வேரியன்ட் கார்களுக்கு 7-8 வாரங்களாக காத்திருப்பு காலம் குறைக்கப்பட்டுள்ளது.

Kia Waiting Period

கியா கேரன்ஸ் காரில் தற்போது பிரிமியம், பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ் பிளஸ், லக்ஸரி, லக்ஸரி பிளஸ் உள்ளிட்ட வேரியன்ட்கள் இருக்கிறது. இந்த வேரியன்ட்களுக்கு பொதுவாக 11-12 வாரம் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. கியா கேரன்ஸ் கார் தற்போது 7 மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.

கியா கேரன்ஸ் டீசல் இன்ஜின் வேரியனட்களை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் சிஆர்டிஐ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 116 பிஎஸ் பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது பிரீமியம், பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ் பிளஸ், லக்ஸரி மற்றும் லக்ஸரி பிளஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார்களுக்கு 11 முதல் 12 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

Kia Waiting Period

கியா சோனட் காம்பேக்ட் எஸ்யூவி காரை பொருத்தவரை செக்மெண்டிலேயே சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கிறது. இந்த காருக்கும் 12 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்த கார் GTX 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், HE MT 1.2லிட்டர் பெட்ரோல், HTK MT 1.2 லிட்டர் பெட்ரோல், HTK Plus iMT 1.0 லிட்டர் பெட்ரோல்,HTX Plus 1.5 லிட்டர் டீசல் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகிறது.

இதில் டீசல் வேரியன்டிற்கு மட்டும் 7-8 வாரங்கள் காத்திருப்பு காலமும், மற்ற வேரியன்ட்களுக்கு 12 வாரங்கள் வரை காத்திருப்பு காலமும் இருக்கிறது. இதில் GTX (O), GTX Plus மற்றும் GTX Plus DCT வேரியன்ட்களை பொருத்தவரை 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காருக்கு 2-3 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

Kia Waiting Period

கியா கேரன்ஸ் நிறுவனம் ஏப்ரல் மாதம் முதல் தயாரிப்பை அதிகரித்து இந்த காத்திருப்பு காலத்தை குறைத்துள்ளது. கியா கார்களுக்கு அதிக டிமாண்ட் இருக்கும் சூழ்நிலையில் தயாரிப்பை அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம் கியா கார்னிவெல் காரின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதன் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா பிராண்ட் தற்போது மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது காத்திருப்பு காலத்தை குறைத்திருப்பதும் கார் வாங்க நினைப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தியாக அமைந்துள்ளது. கியா நிறுவனம் மிக குறுகிய காலத்தில் இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 20, 2023, 16:00 [IST]
English summary
Kia reduced waiting period in april carens sonet car details
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X