20 லட்ச ரூபா காருடன் மோதி மூக்குடைந்த பென்ஸ் கார்.. இப்படி ஆகும்னு அதோட ஓனரே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பிரபலமான கார் மாடல்களில் கியா செல்டோஸ்-ம் ஒன்றாகும். இந்த கார் பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காருடன் மோதலைச் சந்தித்த பென்ஸ் சொகுசு கார் ஒன்று, மிகப் பெரிய சேதத்திற்கு ஆளாகி இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விபத்தின் வாயிலாக நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். கியா நிறுவனத்தின் செல்டோஸ் காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் இந்த கார் மாடலே இந்தியாவில் கியாவிற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த வாகனமாகும்.

கியா செல்டோஸ் விற்பனைக்கு வந்த அந்தவேளையிலேயே எம்ஜி நிறுவனமும் அதன் ஹெக்டர் கார் மாடலின் வாயிலாக இந்தியாவில் கால் தடம் பதித்தது. ஆனால், இதனால் பெரிய அளவிற்கு இந்தியர்களைக் கவர முடியவில்லை. அதேவேளையில், கியா செல்டோஸ் அளவிற்கு இல்லை என்றாலும், ஓர் நல்ல எண்ணிக்கையில் அது மாதந்தோறும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
கியா செல்டோஸின் பக்கம் இந்தியர்கள் அதிகளவில் குவிய அந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் அதிக சிறப்பு வசதிகளும், பட்ஜெட் விலையுமே முக்கிய காரணமாக இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த கார் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகளைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையில் ஓர் தரமான சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. ஆமாங்க, இந்த கார் அதிக உறுதியானது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சமீபத்தில் விலையுயர்ந்த சொகுசு கார் உடன் சந்தித்த மோதல் ஒன்றின் வாயிலாகவே அக்கார் நல்ல உறுதித் தன்மைக் கொண்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டு இருக்கின்றது.
அது மோதியது பென்ஸ் இ கிளாஸ் வகை கார் மாடல் ஆகும். அதிக சொகுசு வசதிக்கும், பாதுகாப்பு அம்சங்களுக்கும் பெயர்போன கார் மாடலே இ கிளாஸ் இருக்கின்றது. இந்த காரும் கியா செல்டோஸும் அண்மையில் நேருக்கு நேர் மோதலைச் சந்தித்து இருக்கின்றன.
இந்த விபத்தில் இரு கார்களுக்கும் சற்று இணையான அளவிலேயே சேதத்தை சந்தித்ததுபோல் தெரிகின்றது. ஆனால், சற்று உற்று பார்க்கையில் பென்ஸ் இ கிளாஸ் உடன் ஒப்பிடுகையில் செல்டோஸுக்கு சற்று அடி அதிகமாகவே விழுந்திருக்கின்றது. இரண்டிற்கும் இடையில் இருக்கும் விலை வித்தியாசத்தை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த பாதிப்பு அவ்வளவு பெரியதாக தெரியவில்லை.
பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட பென்ஸ் கார் சற்று கூடுதல் பாதுகாப்பானதாககூட இல்லை என்றால் அது நியாயமாக இருக்காது. இதையே அதுவும் இந்த விபத்தில் நிரூபித்துக் காண்பித்து இருக்கின்றது. இரண்டு கார்களின் பம்பரும் முழுமையாக சேதமடைந்து இருக்கின்றன. அத்துடன், ஃபெண்டர், ஹெட்லைட், டயர் மற்றும் வீல் உள்ளிட்டவை மிகக் கடுமையான சேதத்திற்கு ஆளாகி இருக்கின்றன.
இதேபோல் இரு கார்களிலும் பான்னெட்டும் மிக மோசமாக பாதிப்படைந்து உள்ளது. சொல்லப்போனால், பென்ஸ் இ கிளாஸ் காரின் பான்னெட் மிகக் கடுமையாக நொருங்கி போயிருக்கின்றது. நல்ல வேளையாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆமாங்க, அதிர்ஷ்டவசமாக இந்த காரில் பயணித்த அனைவரும் சிறு காயங்கள்கூட இன்றி தப்பித்து இருக்கின்றனர்.
இதற்கு அந்த கார்களில் இடம் பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்களே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. பென்ஸ் இ கிளாஸ் சொகுசு காரில் டிரைவிங் அசிஸ்டண்ட் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், செல்டோஸ் காரிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் என பல அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே அந்த காரில் இருந்த பயணிகளின் உயிரை பாதுகாத்து இருக்கின்றது. இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. இருவருக்கும் அதிக செலவைக் கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரு கார்களில் யார் மீது தப்பு இருக்கின்றது என்பது தெரியவில்லை. இருப்பினும், காரில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை வைத்து பார்க்கையில் அதீத வேகத்தின் காரணமாக இந்த விபத்து அரங்கேறி இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இரு கார்களில் ஏற்பட்டிருக்கும் சேதமும் இதையே நமக்கு தெரியப்படுத்துகின்றன. இதன் வாயிலாக அதிக வேகம் எப்போதும் ஆபத்தானதே என்பது மீண்டும் உறுதியாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications