புது கார், பைக் வாங்க போறவங்க தலையில் இடியை இறக்கீட்டாங்க! இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). மிக குறுகிய காலத்திலேயே கியா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்து விட்டது. தற்போதைய நிலையில் கியா நிறுவனம் இந்திய சந்தையில் மொத்தம் 4 கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது.
அவை கியா செல்டோஸ் (Kia Seltos), கியா கேரன்ஸ் (Kia Carens), கியா சொனெட் (Kia Sonet) மற்றும் கியா இவி6 (Kia EV6) ஆகியவை ஆகும். இதில் கியா இவி6 எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கியா கார்னிவல் (Kia Carnival) என்ற காரையும், கியா விற்பனை செய்து வந்தது. ஆனால் இந்தியாவில் கியா கார்னிவல் காரின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.

எனினும் வரும் 2024ம் ஆண்டு, வெகுவாக அப்டேட் செய்யப்பட்டு, கியா கார்னிவல் கார் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். தீபாவளி (Diwali) பண்டிகையை முன்னிட்டு, கியா நிறுவனத்தின் கார்களை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி.
நீங்கள் கியா கார்களை வாங்குவதாக இருந்தால், சற்று அதிக விலையை (Price) கொடுக்க தயாராகி கொள்ளுங்கள். ஆம், விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி கியா செல்டோஸ் மற்றும் கியா கேரன்ஸ் ஆகிய கார்களின் விலைகள் மட்டும் உயர்த்தப்படவுள்ளன.

இந்த 2 கார்களின் விலையும், 2 சதவீதம் வரை உயரவுள்ளது. அதே நேரத்தில் இந்த விலை உயர்வு வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கியா சொனெட் மற்றும் கியா இவி6 ஆகிய 2 கார்களின் விலைகளும் உயர்த்தப்படாது என்பது சற்று ஆறுதலான விஷயம்.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், கியா செல்டோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் (Kia Seltos Facelift) மாடல், கடந்த ஜூலை மாத இறுதியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது நடந்து சுமார் 2 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், கியா செல்டோஸ் காரின் விலைகள் உயர்த்தப்படவுள்ளன.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த புதிய மாடல் எவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது? என்பதற்கு, இந்த முன்பதிவு எண்ணிக்கையே சாட்சி. எனவே இந்த விலை உயர்வு, கியா செல்டோஸ் காரின் விற்பனையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது.
அதேபோல் கியா கேரன்ஸ் காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் கார்களில் ஒன்றுதான். எனவே விலை உயர்வால், அதன் விற்பனையும் பாதிக்கப்படுமா? என்பது சந்தேகம்தான். இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கியா கேரன்ஸ், மிட்சைஸ் எஸ்யூவி (Midsize SUV) ரகத்தை சேர்ந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளியை ஒட்டி கியா நிறுவனத்தின் கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த விலை உயர்வு சற்று பாதிப்பை ஏற்படுத்தும். கியா நிறுவனத்தை தொடர்ந்து, இன்னும் பல்வேறு நிறுவனங்களும் கார்களின் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, இரு சக்கர வாகன நிறுவனங்களும் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே தீபாவளி பண்டிகைக்கு புதிய கார் அல்லது டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், சற்று அதிக விலையை கொடுக்க தயாராகி கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








