இந்த காரை வாங்க எல்லாரும் வரிசையில் நிக்கறாங்க! கூரைய பிச்சுகிட்டு புக்கிங் கொட்டிகிட்டு இருக்கு!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், கியா செல்டோஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் கடந்த ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதற்கு சில நாட்களுக்கு முன்னதாகதான் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள், அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. சுமார் 2 மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், அதற்குள்ளாக கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன.

Kia Seltos Facelift

கியா நிறுவனம் தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கே ஆச்சரியமான மற்றொரு விஷயம் என்னவென்றால், 100ல் 47 பேர், அடாஸ் (ADAS) வசதியுடன் கூடிய வேரியண்ட்களை (Variants) முன்பதிவு செய்துள்ளனர் என்பதுதான். கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், லெவல் 2 அடாஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர 6 ஏர்பேக்குகள், ட்வின் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே, ட்யூயல் பேன் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளன. இதில ட்யூயல் ஸ்க்ரீன் டிஸ்ப்ளேவை பொறுத்தவரையில், ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும்.

Kia Seltos Front Design

மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். செயல்திறனை பொறுத்தவரையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும்.

இதுதவிர மற்றொரு 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் இந்த காரின் ஆரம்ப விலை (Price) 10.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) ஆகிய கார்களுடன், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போட்டியிட்டு வருகிறது.

இதுதவிர ஹோண்டா எலவேட் (Honda Elevate), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களுக்கும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, அதன் போட்டியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த போகிறது என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 20, 2023, 23:39 [IST]
English summary
Kia seltos facelift 50000 bookings milestone read full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+