புக்கிங் பண்ண இப்பவே எல்லாரும் ரெடி ஆயிட்டாங்க! நாளைக்கு வெப்சைட்டே க்ராஷ் ஆக போகுது! நடுக்கத்தில் மாருதி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் இதன் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் வாரங்களில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலைகள் அறிவிக்கப்படவுள்ளன.
அதற்கு முன்னதாக நாளையில் இருந்து (ஜூலை 14), இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. டெக் லைன், ஜிடி லைன் மற்றும் எக்ஸ் லைன் என மொத்தம் 3 ட்ரிம்களில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கிடைக்கும். செயல்திறனை பொறுத்தவரையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி, சிவிடி, டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கியா செல்டோஸ் காரின் முந்தைய மாடலை போலவே, ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமிருக்காது. 12.5 இன்ச் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், வெலல் 2 அடாஸ் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முக்கியமான வசதிகள் ஆகும்.

இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல், போஸ் 8 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் போன்ற வசதிகளும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை பல்வேறு கார்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது.
இதில், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
இந்த செக்மெண்ட்டில் கூடிய விரைவில் மேலும் ஒரு புதிய கார் களமிறங்கவுள்ளது. அது ஹோண்டா எலவேட் (Honda Elevate) ஆகும். ஹோண்டா எலவேட் கார் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில், ஹோண்டா எலவேட் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த காருக்கும், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனையில் சவால் அளிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகைக்கு பின், கியா செல்டோஸ் காரின் விற்பனை தற்போது இருப்பதை காட்டிலும் மேலும் உயரலாம். ஃபேஸ்லிஃப்ட் மாடலை தொடர்ந்து, கியா செல்டோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








