நாடே காத்து கிடக்கும் இந்த கார் இவ்ளோ சீக்கிரம் வரப்போகுதா! மாருதி, ஹூண்டாய்லாம் தொடை நடுங்கி போய் கெடக்கறாங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த செக்மெண்ட்டில் போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், செல்டோஸ் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது.
கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது கேமராவின் கண்களிலும் பல முறை சிக்கியுள்ளது. இந்த சூழலில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகத்திற்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்து கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் ஜூலை 4ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சுமார் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை கியா டீலர்ஷிப்கள் தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனம் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனில் (Design) நிறைய மாற்றங்களை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதன்படி முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள், புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய எல்இடி டெயில்லைட்கள் மற்றும் புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகிய அம்சங்களை 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் நாம் எதிர்பார்க்கலாம்.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், அடாஸ் (ADAS), எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், பனரோமிக் சன்ரூஃப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதியுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களை நாம் எதிர்பார்க்க முடியும்.
இதுதவிர முன் பகுதியில் வென்டிலேட்டட் வசதி கொண்ட இருக்கைகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளும் 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கியா செல்டோஸ் காரின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகிய கார்களுக்கு, கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பது எங்கள் கருத்து.
இதுதவிர ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனையில் நெருக்கடியை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா செல்டோஸ் காரின் ஆரம்ப விலை (Price) 10.89 லட்ச ரூபாயாக உள்ளது.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.65 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால், இதைக்காட்டிலும் சற்று அதிகமான விலையில் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








