இந்திய மக்கள் காத்து கிடந்த காரின் டெலிவரி தொடங்கியது! எல்லாரும் சந்தோஷமா வாங்கீட்டு போறாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட 2023 ஃபேஸ்லிஃப்ட் (2023 Facelift) மாடல் வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 13,424 முன்பதிவுகளை (Bookings) வாரி குவித்து விட்டது. இந்த சூழலில், 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம், இந்த புதிய மாடலின் டெலிவரி (Delivery) பணிகளை கியா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. கியா செல்டோஸ் காரின் புதிய மாடலை இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியாக டெலிவரி எடுக்கும் வீடியோ (Video) சமூக வலை தளங்களில் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் டிசைனை பொறுத்தவரையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வசதிகளை பொறுத்தவரையில், இந்த காரின் உட்புறத்தில் ட்யூயல் டிஸ்ப்ளே சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகும். மற்றொன்று 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும்.

இதுதவிர ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ட்யூயல் பேன் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இது நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும். 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.
இதில், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மெண்ட், நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இதுதவிர லெவல் 2 அடாஸ் வசதியையும் 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள், 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வழங்கப்பட்டுள்ளன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், மேனுவல், ஐஎம்டி, டார்க் கன்வெர்டர், சிவிடி மற்றும் ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுக்கு, 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் வடிவில் கடுமையான சவால் காத்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








