வெறும் ரூ.11 லட்சத்தில் கியா வழங்கும் தரமான தயாரிப்பு!! கார் பார்க்க இப்படித்தான் இருக்கும்!

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் (Kia Seltos Facelift) காரின் தோற்றம் எவ்வாறு இருக்கும்? அதனுள் வழங்கப்படும் வசதிகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ள ஆசையா? 2023 கியா செல்டோஸ் காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றிற்கு வந்துள்ளது. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

கியா நிறுவனம் இந்தியாவில் நுழைந்தப் பின் அறிமுகப்படுத்திய முதல் கார் செல்டோஸ் ஆகும். இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய எஸ்யூவி கார்களுள் ஒன்றாக விளங்கும் செல்டோஸை கியா நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்தது. புதிய கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த 2023 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

entry-level kia seltos at showrooms

புதிய செல்டோஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.10.90 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா கார்களுக்கு போட்டியாக விளங்கும் கியா செல்டோஸின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது.

இதில், புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் எண்ட்ரீ-லெவல் எச்.டி.இ வேரியண்ட் ஒன்றின் புகைப்படங்கள் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ளன. அதாவது, மேற்கூறப்பட்ட ரூ.10.90 லட்சம் என்பது இதன் விலை தான். நமக்கு கிடைத்துள்ள படங்களில், இந்த காரின் முன்பக்கத்தில் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, எல்இடி டெயில்லைட்கள் மற்றும் 16-இன்ச் இரும்பு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

entry-level kia seltos at showrooms

காருக்கு உள்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மடக்கும் வசதிக் கொண்ட ஸ்டேரிங் சக்கரம், பின் ஜன்னல் கண்ணாடிக்கான சன்ஷேட்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, 6 ஏர்பேக்குகள் மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன.

செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் வழங்கப்படும் எலக்ட்ரிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ஆட்டோ-ஹோல்ட் வசதி உடன் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், லெவல் 2 அடாஸ், காரின் முன் & பின்பக்கத்தில் எல்இடி லைட் பார்கள் போன்றவை இங்கே பதிவிடப்பட்டுள்ள படங்களில் காட்சித்தரும் எச்டிஇ வேரியண்ட்டில் இல்லை.

entry-level kia seltos at showrooms

அதேபோல், விலைமிக்க வேரியண்ட்களில் சற்று பெரியதாக 17 இன்ச்சில் ட்யூயல்-டோனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த வேரியண்ட்டில் இரும்பு சக்கரங்கள் மட்டுமே. செல்டோஸ் எச்.டி.இ வேரியண்ட்டை பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கலாம். இதில் பெட்ரோல் ஆப்ஷனில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் கிடைக்கும்.

அதிகப்பட்சமாக 160 பிஎஸ் மற்றும் 253 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வழங்கக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கிறது. மறுப்பக்கம், டீசல் ஆப்ஷனில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது இண்டெலிஜண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும். எச்.டி.இ வேரியண்ட்டில் கிடைக்காத 3வது டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் ஒன்றும் கியா செல்டோஸில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

entry-level kia seltos at showrooms

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியாவில் பட்ஜெட் பார்த்து கார் வாங்குவோரே அதிகம். அத்தகையவர்களுள் ஒருவரா நீங்கள்? கியா செல்டோஸை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு இந்த எண்ட்ரீ-லெவல் எச்.டி.இ வேரியண்ட் சரியானதாக இருக்கும். 2023 கியா செல்டோஸ் காரை நாங்கள் சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். அதன் மூலம் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை ரிவியூவாக வழங்கியுள்ளோம். அதனை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் காணலாம்.

Image Courtesy

More from DriveSpark

Article Published On: Thursday, September 28, 2023, 14:59 [IST]
English summary
Kia seltos facelift entry level variant at showrooms
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X