மாருதிலாம் ஆடி போய் கெடக்கறாங்க! இந்த நிறுவனத்தின் காருக்கு இவ்ளோ பேர் வெயிட்டிங்கா! தரமான சம்பவம் இருக்கு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை, கியா நிறுவனம் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை (Price) 10.90 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.80 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் (X-Line) மாடலின் விலை, டாப் வேரியண்ட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் அதிகம் ஆகும்.

Kia Seltos Facelift

அதாவது 20 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில் வெறும் ஒரு மாத காலத்திற்கு உள்ளாக செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு 31,716 முன்பதிவுகள் (Bookings) குவிந்துள்ளதாக கியா இந்தியா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வளவு முன்பதிவுகள் என்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் ஆகும்.

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் 18 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அத்துடன் அடாஸ் (ADAS) உள்பட பல்வேறு வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மொத்தம் 3 இன்ஜின் (Engine) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2023 Kia Seltos

அவை 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இவை அனைத்து பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் 2வது கட்டத்திற்கு இணக்கமானவை ஆகும். அத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இந்த இன்ஜின்கள் கிடைக்கும்.

அடாஸ் தவிர, இரண்டு 10.25 இன்ச் திரைகளும் கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மிக முக்கியமான வசதிகளாக உள்ளன. இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். அத்துடன் பனரோமிக் சன்ரூஃப் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான். இது கியா செல்டோஸ் காரின் போட்டி மாடல்களுக்கு நிச்சயம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் நமக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை.

இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகியவைதான், கியா செல்டோஸ் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்கள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 16, 2023, 23:58 [IST]
English summary
Kia seltos facelift receives over 31000 bookings check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+