ஷோரூம்ல இருந்து எடுத்து வந்து கொஞ்சம் நாள்கூட ஆகல.. அதுக்குள்ள உருக்குலைஞ்சிருச்சு! இப்படி ஆக என்ன காரணம்?..

கியா (Kia) நிறுவனத்தின் லேட்டஸ்ட் லான்சாக ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸ் (Facelift Seltos) இருக்கின்றது. முந்தைய மாடல் செல்டோஸுக்கு கிடைத்துக் கொண்டிருந்ததைப் போலவே புதிய ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸுக்கும் அமோக வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, இந்தக் காருக்குப் புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 13,424 புக்கிங்குகள் குவிந்தன.

இப்போதும், மக்கள் மத்தியில் வரவேற்பு மிக அமோகமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக இப்போதே ஃபேஸ்லிஃப்ட் கியா செல்டோஸுக்கு காத்திருப்பு காலம் 4 மாதங்களாக அதிகரித்து இருக்கின்றது. இத்தகைய அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் புத்தம் புதிய ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸே தற்போது விபத்தில் சிக்கி இருக்கின்றது.

Kia seltos

இது சந்தித்து இருக்கும் விபத்து மிக மிக மோசமான விபத்தாகும். இந்த விபத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் பல இருக்கின்றன. மிக முக்கியமாக இந்த கார் மிகுந்த பாதுகாப்பு திறன் கொண்டது என்பது தெரிய வந்திருக்கின்றது. உயர் வேகத்தில் விபத்தில் சந்தித்த காரணத்தினால் இந்த கார் முற்றிலுமாக உருக்குலைந்து போயிருக்கின்றது.

இருந்த போதிலும், காரில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிரஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். மேலும், பெரிய அளவில் காயங்களும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலை புதிய கியா செல்டோஸ் அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

Kia seltos facelift met crash

இது பாதுகாப்பான வாகனம் என்பது தெரிய வந்திருக்கும் அதேநேரத்தில், எந்தவொரு வாகனத்திலும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடாது என்பதற்கு சான்றாகவும் இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஆமாங்க, அதிகபட்ச வேகத்தில் இந்த காரில் பயணித்ததே தற்போது அக்கார் விபத்தைச் சந்திக்க மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது.

விபத்தைச் சந்தித்து இருக்கும் செல்டோஸ் மிக சமீபத்திலேயே டெலிவரி எடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், கார் ரைடை என்ஜாய் செய்யும் விதமாக அதன் டிரைவர் ஹை ஸ்பீடில் ஓட்டி வந்திருக்கின்றார். அவ்வாறு ஓட்டி வரும்போதே கார் கட்டுப்பாட்டை இழந்து போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் மோதி விபத்தைச் சந்தித்து இருக்கின்றது.

Kia seltos rear

கார் சிக்னல் கம்பத்தில் மோதியது மட்டுமின்றி டிவைடரிலும் மோதி இருக்கின்றது. இதுதவிர பலமுறை கார் உருண்டும் சென்றிருக்கின்றது. இதன் விளைவாகவே கியா செல்டோஸ் தற்போது முழுவதுமாக உருக்குலைந்துக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, மேற்கூரை மற்றும் முகப்பு பகுதி மிக மோசமாக சிதைந்த்துக் காட்சியளிக்கின்றது.

இது சந்தித்து இருக்கும் சேதத்தைப் பார்க்கையில் மீண்டும் பயன்படுத்துவதற்கு சற்றும் தகுதியில்லா காராக செல்டோஸ் மாறி இருப்பது தெளிவாக தெரிகின்றது. டெலிவரி எடுத்த கொஞ்ச நாளிலேயே இத்தகைய சோகமான சம்பம் அரங்கேறி இருப்பது கார் காதலர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Kia seltos running shot

இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் அரங்கேறக் கூடாது என்பதற்காகவே அதி வேகம் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. இருப்பினும், பலர் அதிக வேகத்தில் பயணித்து தாங்கள் ஆசை ஆசையாக வாங்கிய வாகனங்களை இழந்துக் கொண்டிக்கின்றனர். இதுவாவது பரவாயில்லை ஒரு சிலர் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்திருக்கின்றனர்.

இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்க கட்டாயம் அதிக பாதுகாப்பான கார்களை வாங்குவதே நல்லது ஆகும். இந்தியாவில் கியா செல்டோஸ் ரூ. 10.90 லட்சம் தொடங்கி ரூ. 20 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டிபிஎம்எஸ் மற்றும் மும்முனை சீட் பெல்ட் என எக்கசக்க அம்சங்கள் ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, அடாஸ் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக அவசரகால ஆட்டோமேட்டிக் பிரேக்கிங், ஃபார்வார்டு கொலிசன் வார்னிங் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் என பல பாதுகாப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு வசதிகளைத் தாங்கிய வாகனமாகவே கியா செல்டோஸ் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய கியா செல்டோஸுக்கு வரவேற்பு பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இந்த விபத்து சம்பவம் அக்கார் தற்போது அதிக பாதுகாப்பானது என்பதை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருக்கின்றது. இந்த நிகழ்வு அதிக பாதுகாப்பான காரை விரும்புவோர்கள் மத்தியில் செல்டோஸுக்கு வரேவற்பை அதகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Article Published On: Saturday, August 5, 2023, 11:30 [IST]
English summary
Kia seltos met accident due to high speed
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X