இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா! இனி கியா கார் வித்த மாதிரிதான்! இவங்க இப்படி செய்வாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் பிராண்டாக கியா நிறுவனம் மாறி இருக்கின்றது. இந்த பிராண்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக செல்டோஸ் இருக்கின்றது. இதுவே இந்தியாவில் கியாவிற்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த கார் மாடலாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த காரின் விலையையே கியா தற்போது உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரூ. 30 ஆயிரம் வரை அதன் விலையை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் கியா கார் பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கியா செல்டோஸ் ஓர் மிட்-சைஸ் எஸ்யூவிர ரக காராகும். ஒட்டுமொத்தமாக 9 விதமான வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில், ஒரு சிலவற்றின் விலை மட்டுமே தற்போது உயர்த்தப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, செல்டோஸின் அனைத்து தேர்வுகளின் விலையையும் கியா உயர்த்தவில்லை. ஜிடிஎக்ஸ் பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன் ஆகிய ட்ரிம்களின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்டுகளின் விலையில் ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 30 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, எச்டிஇ, எச்டிகே, எச்டிகே பிளஸ், எச்டிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் ஆகிய தேர்வுகளிலும் செல்டோஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை அனைத்தைக் காட்டிலும் மிக அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கிய கார் மாடலாக செல்டோஸின் ஜிடிஎக்ஸ் பிளஸ் மற்றும் எக்ஸ் லைன் ஆகியவை இருக்கின்றன.

இதில் சில சிறப்பம்சங்களின் விலை உயர்ந்திருக்கின்ற காரணத்தினாலேயே, நிறுவனம் அதன் உற்பத்தி செலவு சுமையை குறைக்கும் பொருட்டு இந்த விலை உயர்வை செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இந்த விலை உயர்விற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. கியா செல்டோஸ் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளே செல்டோஸில் வழங்கப்படுகின்றன. இந்த எஞ்ஜின் தேர்வுகளுடன் சேர்த்து 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு ஐஎம்டி, 6 ஸ்பீடு ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர், சிவிடி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றது.
விலை உயர்வைத் தொடர்ந்து கியா செல்டோஸின் காரின் அதிகபட்ச விலை ரூ. 20.30 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. அதேநேரத்தில் இதன் ஆரம்ப விலை ரூ. 10.90 லட்சமாக உள்ளது. அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். கியா நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவின் மின்சார வாகன பிரிவிலும் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்த திட்டமிட்டு இருக்கின்றது.
இதன் அடிப்படையில் 8 எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அது டிரேட்மார்க் பதிவைச் செய்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி கியா நிறுவனம் இவி6 எனும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்திற்கு சொந்தமாக ஆந்திரா மாநிலத்தில் உற்பத்தி ஆலை இருக்கின்றபோதிலும் இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து அக்காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே கியா சுமார் 8 எலெக்ட்ரிக் கார்களுக்கான டிரேட்மார்க் பதிவை நாட்டில் செய்திருக்கின்றது. இவை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு தற்போது இந்திய மின்சார வாகன உலகின் தலைவனாக இருக்கும் டாடா மோட்டார்ஸுக்கு தலைவலியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா நிறுவனம் குறிப்பிட்ட சில தேர்வுகளின் விலையை மட்டுமே உயர்த்தி இருக்கின்றது என்பது பலரிடையே நிம்மதி பெருமூச்சு விட செய்திருக்கின்றது. விரைவில் இந்தியாவில் தொடர்ச்சியாக பண்டிகை காலம் வர இருக்கின்றது. இந்த கால கட்டத்தில் புதிய வாகன சேல்ஸ் அபரீதமாக இருக்கும். இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டு வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு சலுகைகளை வழங்க ஆரம்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








