ரெண்டர வருஷத்துல காருல ஏற்பட்ட மிக பெரிய சிக்கல்! ஒத்த பைசா வாங்காம சரி செய்த கியா! லட்ச கணக்கான ரூபா மிச்சம்!

கியா நிறுவனம் 1.5 - 2 லட்ச ரூபா மதிப்புள்ள பாகத்தை கட்டணமே இல்லாமல் மாற்றி கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கியா நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் கார் மாடலே செல்டோஸ் (Kia Seltos) ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக காராகும். நிறுவனத்தின் இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இருப்பினும், இப்போதும் செல்டோஸ்க்கு டிமாண்ட் பல மடங்கு அதிகரித்தேக் காணப்படுகின்றது.

கியா

வரவேற்பு அதிகம்

இதற்கு காரின் குறைவான விலை, உலக தரம் வாய்ந்த சிறப்பம்சங்கள் ஆகியவற்றை செல்டோஸ் உள்ளடக்கி இருப்பதே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இதுமட்டுமின்றி, விற்பனைக்கு பிந்தைய சேவையையும் கியா நிறுவனம் மிக சிறப்பாக மேற்கொண்டு வருகின்றது. இதன் விளைவாகவே இந்தியர்கள் அதிகளவில் அதன் தயாரிப்புகளின் பக்கம் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த நிலையிலேயே நிறுவனம் அதன் வாடிக்கையாளருக்கு செய்து கொடுத்த சிறப்பான சேவை பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ரெண்டர வருஷத்துல ஏற்பட்ட சிக்கல்

இரண்டரை ஆண்டுகளில் மிகப் பெரிய கியா செல்டோஸ் கார் சந்தித்திருக்கின்றது. இந்த கோளாறே முற்றிலுமாக கட்டணமே இல்லாமல் கியா சரி செய்து கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய மிக சிறப்பான சேவையை அடிக் கோடிட்டு காட்டும் நிகழ்வாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண் பன்வார். இவருக்கு சொந்தமான கியா செல்டோஸ் காரிலேயே மிகப்பெரிய சிக்கல் ஏர்பட்டிருக்கின்றது.

கியா

ஆயில் லீக்

கியர்பாக்ஸ் ஆயில் லீக்கேஜ் பிரச்னையே காரில் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த விஷயம் குறித்து கியா சர்வீஸ் மையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கின்றது. அதை அறிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே கியா சர்வீஸ் மைய ஊழியர்கள் உடனடி நடவடிக்கையில் களமிறங்கி இருக்கின்றனர். குறிப்பாக, தாமாக முன் வந்து வாரண்டியின் கீழ் கோளாறுகள் அனைத்து செரி செய்யப்பட்டு இருக்கின்றது. இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என அருண் பன்வார் கூறி இருக்கின்றார்.

யுட்யூபர்

இவர் பிரபல யுட்யூபர் ஆவார். கியாவின் இந்த மிக சிறந்த சர்வீஸ் பற்றிய தகவலை அவரே வீடியோவாக யுட்யூபில் வெளியிட்டு இருக்கின்றார். இது தென் கொரிய நிறுவனமான கியாவிற்கு மேலும் புகழ் சேரும் வகையில் அமைந்துள்ளது. கியாவின் தயாரிப்புகள் தொடர்ச்சியாக வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மட்டும் 28,634 யூனிட் கியா கார்கள் விற்பனையாகின.

டிரான்ஸ்மிஷன் கோளாறு

இது 2022 ஜனவரியைக் காட்டிலும் 48.22 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். இத்தகைய வளர்ச்சி பாதையை நோக்கியே கியா இந்தியாவில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதன் விற்பனையை அதிகப்படுத்தும் ஓர் சம்பவமாக கட்டணமில்லாமல் ஆயிலை லீக்கேஜ் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. பிரச்னை சரி செய்வதற்கு முன்னர் டிரான்மிஷன் மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், தற்போது அது சரி செய்யப்பட்டு இருப்பதாகவுண் அருண் பன்வார் தெரிவித்துள்ளார்.

20 நாளில் ரிட்டன்

அவர் வைத்திருப்பது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வசதிக் கொண்ட 1.5 லிட்டர் டீசல் மோட்டார் செல்டோஸ் ஆகும். இதையே 20 நாள் அவகாசத்தில் கியா சர்வீஸ் மையம் சரி செய்து கொடுத்திருக்கின்றது. சர்வீஸ் மையம் இலவசமாக மாற்றியிருக்கும் புதிய டிரான்ஸ்மிஷனை தனியாக, அதாவது, வாரண்டி இல்லாமல் கட்டணத்தின்கீழ் மாற்றியிருந்தால், அதற்கு ரூ. 1.5 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய மிக விலையுயர்ந்த சேவையை வெறும் 20 நாட்களில் கியா இலவசமாக செய்து முடித்திருக்கின்றது. கியா செல்டோஸ் 1.5 லிட்டர் டீசல், 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் ஆகிய மூன்று விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டீசல் மோட்டார் 115 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. பெட்ரோல் 115 பிஎஸ்ஸையும், டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் 140 பிஎஸ் பவரையும் வெளியேற்றும். மேனுவல், டார்க் கன்வெர்டர், ஐஎம்டி, சிவிடி மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் என பன்முக கியர்பாக்ஸ் தேர்வுகளில் செல்டோஸை கியா விற்பனைக்கு வழங்குகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, February 6, 2023, 11:50 [IST]
English summary
Kia seltos service at no cost
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+