செல்டோஸ் காரை இத்தனை லட்சம் இந்தியர்கள் வாங்கி இருக்காங்களா! படத்துக்குகூட இவ்ளோ கூட்டம் குவியுமா தெரியல!!
ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சத்தில் உறைந்துக் கொண்டிருந்த காலம் அது. உலக நாடுகள் பல லாக்டவுன் எனும் வளையத்தில் சிக்கியிருந்த அந்த கால கட்டத்திற்கு சற்று முன்னதாகவே இந்தியாவில் களமிறங்கியே தீருவோம் என்பதைப் போல நாட்டில் கால் தடம் பதித்தது கியா நிறுவனம்.
பலர் இந்த நிறுவனம் இதற்கு பின்னர் இந்தியாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் என நினைத்தனர். மேலும், வந்த வேகத்திலேயே அது நாட்டை விட்டு வெளியேறிவிடும் என்றும் பலர் கூறினர். இவ்வாறு கூறியவர்கள் அனைவரின் வாயையும் வெகு விரைவிலேயே கியா நிறுவனம் மூடிவிட்டது.

ஆமாங்க இந்தியர்களின் ஃபேவரிட் பிராண்டுகளில் ஒன்றாக கியா மாறியது. இந்த நிறுவனத்தின் செல்டோஸ் கார் மாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நிறுவனம் தன்னுடைய வருகையை முன்னிட்டு விற்பனைக்குக் கொண்டு வந்த முதல் கார் மாடல் செல்டோஸ் ஆகும்.
இதுவே கியாவிற்கு இந்தியாவில் அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த கார் மாடல் ஆகும். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மாடலே மிக மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 5 லட்சம் யூனிட் இதுவரை அந்த கார் விற்பனையாகி இருக்கின்றது.

இது விற்பனைக்கு வந்து சுமார் 46 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இந்த நிலையிலேயே கியா செல்டோஸ் இந்த பிரமாண்ட விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது. 2019 ஆகஸ்டு மாதத்திலேயே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் இருந்து உலக நாடுகள் சிலவற்றிற்கும் இந்த கார் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இங்கிருந்து இந்த கார் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மெக்ஸிகோ, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா பசிஃபிக் நாடுகள் உள்ளிட்டவற்றிற்கு எல்லாம் இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்போதைய நிலவரப்படி இந்த கார் ரூ. 10.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இதன் அதிகபட்ச விலையே ரூ. 19.65 லட்சம் மட்டுமே ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய குறைவான விலையிலேயே மிக அதிக வசதிகளை வாரி வழங்கும் தயாரிப்பாக கியா செல்டோஸ் காட்சியளிக்கின்றது. பிரீமியம் தர அம்சங்கள் பலவற்றை இந்த விலைகளிலேயே கியா வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், சன்ரூஃப், அதிக எண்ணிக்கையில் எஞ்ஜின் தேர்வு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகளே கியா செல்டோஸில் வழங்கப்படுகின்றது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6 ஸ்பீடு எம்டி அல்லது சிவிடி மற்றும் 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட் ஏடி தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கியா செல்டோஸ் எஸ்யூவி 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டுமே 27,159 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இத்தகைய அமோக வரவேற்பையே விற்பனைக்கு வந்த நாள் முதலில் இருந்த இந்த கார் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே இப்போது 5 லட்சம் யூனிட் விற்பனையை அது எட்டி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









