கியா செய்த தரமான சம்பவம்! சீனாவிற்கு இந்தியாவிலிருந்து காரை காப்பியடிச்சிருக்காங்க!

கியா நிறுவனம் சினாவின் இவி தினத்தன்று தனது இவி5 என்ற கான்செப்ட் காரை முதன் முறையாக காட்சிப்படுத்தியது. இந்த கார் கியா நிறுவனத்தின் முழு எலெக்ட்ரிக் எஸ்யூவி காராகும். இந்த கார் பார்க்கக் கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனம் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போவின் போது அறிமுகப்படுத்திய இவி 9 கார் போலவே காட்சியளிக்கிறது.

கியா நிறுவனம் இந்த இவி5 காரை சீனாவிற்காக வடிவமைத்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இந்த கார் சீனாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் குறித்த நிறையத் தகவல்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது இந்த கார் குறித்துக் கிடைத்துள்ள சில தகவல்களை மட்டும் விரிவாகக் காணலாம் வாருங்கள்.

 கியா செய்த தரமான சம்பவம்! சீனாவிற்கு இந்தியாவிலிருந்து காரை காப்பியடிச்சிருக்காங்க!

கியா நிறுவனம் இந்த இவி5 காரை வெறும் டிசைன் ஷோகேஸாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள மோட்டார், பேட்டரி, மற்றும் இந்த கார் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்ம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த காரன் வெளிப்புற கட்டமைப்பு ஸ்லீக் ஸ்கல்ப்டட் வடிவில் உள்ளது.

இந்த கியா இவி5 காரில் முன்பக்கம் பிளன்ட் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி லைட் வெளிப்புறத்தில் ஸ்லீக்காக இருக்கிறது. இந்த காரின் ஒட்டு மொத்த வடிவமைப்பைப் பார்க்கும் போது இந்தியாவில் அறிமுகமான இவி9 காரை போலவே காட்சியளிக்கிறது. முக்கியமாக இன் பிராக்கெட் வடிவ டெயில் லைட், மற்றும் டெயில் கேட் ஆகிய அப்படியே உள்ளது.

இந்த காரின் 21 இன்ச் வீல்கள் சமச்சீரற்ற வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கியா இவி5 கான்செப்ட் கார் ஐஸ்பெர்க் மேட் கிரீன் கலரில் இருக்கிறது. ஆனால் இது அந்நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில் சில்வர் நிறத்தில் இருக்கிறது. அந்த புகைப்படத்தைத் தான் நீங்கள் இந்த செய்தியில் பார்த்திருப்பீர்கள். இதில் சில நில நிறங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கியா இவி 5 காரின் உள்ளே பார்க்கும் போது அஸ்தடிக் மஸ்குலின் படியைக் கொண்டுள்ளது. டேஷ்போர்டில் பாதியை அடக்கும் அளவிற்குப் பெரிய ஸ்கரீன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமாக வட்டமான ஸ்டியரிங்காக இல்லாமல் ஆக்டகோனல் ஸ்டியரிங் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு சில பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கியா இவி5 காரில் வழக்கமாக உள்ள சென்டர் கன்சோல் இல்லை. மாறாக அந்த இடத்தில் ஸ்டோரேஜ் செய்ய இடம் இருக்கிறது. சீட்டிங் அரேஞ்ச் மென்ட்கள் பெஞ்ச் போன்ற வடிவமைப்பில் உள்ளது. இவி 9 காரை போல இந்த இவி5 காரிலும் ஸ்வைலிங் சீட்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் முக்கிய அம்சமாக இதில் பொருத்தப்பட்டுள்ளது பானரோமிக் சன் ரூப் ஒரு சோலார் பேனலாக கூட செயல்படுகிறது. ஆனால் இந்த சோலார் பேனல் அதற்கு பயன்படுகிறதென்பது குறித்த தகவலை கியா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இந்த கியா இவி 5 காரை அந்நிறுவனம் ரீசைக்கிள் செய்யக்கூடிய பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கியுள்ளது.

இதன் சீட்கள், கதவுகள், டோர்கள், டேஷ்போர்டுகள், மற்றும் ஹெட்லைனர்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 21, 2023, 21:00 [IST]
English summary
Kia showcased ev5 concept future electric SUV
மேலும்... #கியா #kia
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+